மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

0
1

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, புதுச்சேரி மாநில அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி கொடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநில அரசின் சார்பில் மாநில அரசின் நிதி உதவியாக ரூ.1 கோடி வெள்ள நிவாரணமாக கேரள மாநிலத் துக்கு வழங்கப்படும். அது மட்டுமின்றி கேரள மாநிலத்துக்கு மீட்புப் பணிகளுக்காகவும், இயல்பு வாழ்க்கை திரும்பவும் அவர்களுக்கு உதவி செய்ய தனியாக கணக்கு தொடங்கி அந்த நிதியை முதல்வர் நிவாரண நிதியில் வைத்து கேரள மாநிலத்துக்கு அனுப்ப உள்ளோம்.

கேரள மாநிலத்தின் ஒரு பகுதி யாக மாஹே பகுதி உள்ளது. அவர்களும் நம்முடைய சகோதரர் கள்தான். அவர்களுடைய துக்கத் தில் நாம் பங்கு கொள்ள வேண்டும். ஆகவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் தங்களால் முடிந்த வரை காசோலையாகவும், வரை வோலையாகவும் எடுத்துகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது மிட்டுமின்றி மருந்து, துணிகள், அரிசி போன்ற நிவாரண பொருட்கள் கொடுப்பவர்கள் தாராளமாக கொடுத்து உதவ வேண்டும் என்றார்.