மலத்தை எவ்வளவு நேரம் அடக்கி வைத்தால் என்னென்ன பிரச்னை வரும்னு தெரியுமா?… இத படிங்க… | What happens when you hold your poop?

0
0

நாம் பொதுவாக காலையில் எழுந்ததும் மலம் கழிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருவோம். சில பேருக்கு மலச்சிக்கல் இருந்தால் இதுவும் பிரச்சினையாகவே இருக்கும். குறிப்பாக நாம் நீண்ட தூரம் பேரூந்துகளில் பயணம் செய்யும் அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம், சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்தால் அடக்கி வைத்து கொள்வோம். இப்படி செய்யலாமா?

மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடக்கும் விஷயம். ஆனால் நீங்கள் எல்லா இடத்திலும் மலம் கழிக்கவும் இயலாது. இதனால் சில சமயங்களில் சில மணி நேரம் மலத்தை அடக்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி எவ்வளவு நேரம் இருக்கலாம்? இதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அவசரம்

மலம் குடல் வழியாக வெளியேற்றப்படும் போது நமது உடலின் ரெக்டம் பகுதியை தொட்டவுடன் மூளைக்கு சிக்னல் செல்லும். மூளையானது மலத்தை வெளியேற்ற கட்டளையிட்டே பிறகு மலமானது வெளியேறும். இந்த தாமதிக்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சில சமயங்களில் சில உணவுகள் கூட இந்த சிக்னலை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த உணவுகள் இயற்யாகவே குடல் தூண்டுதலில் ஈடுபடுகின்றன. மேலும் செரிமான நொதியையும் ஒழுங்குமுறை செய்கிறது.

இரண்டு மணி நேரம்

இரண்டு மணி நேரம்

மலம் கழிக்க அவசரம் ஏற்பட்டவுடன் அடிவயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் மூலம் மலம் கழித்தல் அவசரப்படுத்தப்படும். இந்த அழுத்தத்தை மீறி நீங்கள் மலம் கழித்தலை அடக்கினால் நிறைய வயிற்று கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

ஆறு மணி நேரம்

ஆறு மணி நேரம்

நீங்கள் மலம் கழித்தலை ஆறு மணி அடக்கி வைத்தால் அது மலச்சிக்கலாக மாற நேரிடும். எனவே அடிக்கடி அப்படி அடக்கி வைப்பதை தவிருங்கள்.

பன்னிரண்டு மணி நேரம்

பன்னிரண்டு மணி நேரம்

ஆறு மணி நேரம் மலத்தை அடக்கி வைப்பதால் மலமானது ரெம்ப இறுகி இறுக்கமடைந்து விடும். 12 மணி நேரம் அடக்கி வைக்கும் போது இன்னும் நிலைமை மோசமாகி விடும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தம், வலி மற்றும் பைல்ஸ் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

நீண்ட நேரம்

நீண்ட நேரம்

நீங்கள் தொடர்ச்சியாக மலம் கழித்தலை அடக்கி வைக்கும் போது மலமிளக்கிகளை பயன்படுத்தி எளிதாக வெளியேற்ற முற்படலாம். அதுவும் தோல்வியடைந்தால் செயல்முறை நீக்கம் மூலம் வெளியேற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்