மருத்துவ முத்தம் புகழ் ஆரவால் பிளவுபட்ட ஓவியா ஆர்மி | Oviya Army happy and sad at the same time

0
0

சென்னை: ஆரவால் ஓவியா ஆர்மியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரவ் ஓவியாவுடன் நன்றாக கடலை போட்டு முத்தம் எல்லாம் கொடுத்துவிட்டு அவரின் காதலை ஏற்க மறுத்தார். தான் சிங்கிளாக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த ஓவியாவால் ஆரவை மறக்க முடியவில்லை போன்று.

ஓவியாவும், ஆரவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

ஆரவ்

ஓவியாவும், ஆரவும் வெளிநாட்டில் கை கோர்த்து நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிராடு

பிராடு

ஆரவ் வேண்டாம் ஓவியா, அவன் பக்கா பிராடுமா என்று அவரின் ஆர்மிக்காரர்களில் சிலர் எச்சரித்துள்ளனர். அதே சமயம் ஓவியா ஆர்மியில் உள்ள சிலர் இந்த ஜோடி சூப்பர் என்று தெரிவித்துள்ளனர்.

சந்தோஷம்

சந்தோஷம்

ஆரவால் ஓவியா ஆர்மியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஓவியா ஆரவுடன் இருந்தால் தான் சந்தோஷமாக இருப்பார் என்றால் அதுவே எங்களுக்கு போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

மன வேதனை

மன வேதனை

ஆரவ் நன்றாக பழகிவிட்டு மீண்டும் பிரிந்துவிட்டால் அதை ஓவியாவால் தாங்க முடியாமல் போய்விடும் என்று ஒரு சில ரசிகர்கள் அஞ்சுகிறார்கள். ஆரவால் ஒரு முறை கஷ்டப்பட்டது போதும் ஓவியா என்று எச்சரிக்கிறார்கள் ரசிகர்கள்.

படங்கள்

படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தபோதும் அவர் அனைத்தையும் ஏற்கவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.