மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன்… கருணாநிதியை நலம் விசாரிக்க மாட்டேன்…! நடிகை ஓவியா! | Actress Oviya about Kalaignar Health!

0
0

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மாட்டேன் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

களவானி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிறக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு பிரபலமானார்.

அவருடைய நேர்மையான போக்கு எல்லோருக்கும் பிடித்துப்போக பெண் என்றால் ஓவியா போல இருக்கவேண்டும் என்று சொல்லுமளவிற்கு எல்லோரும் மனதிலும் நிறைந்துவிட்டர். இப்போது களவாணி 2, 90 மில்லி, கணேஷ் மீண்டும் சந்திப்போம் என பல படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓவியா. அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக பேசிய ஓவியா, அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பீர்களா என்று கேட்கபட்டதற்கு, நான் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன். நான் அரசியல்வாதி கிடையாது என பதிலளித்தார்.

நடிகர் அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் என பல நடிகர்கள் நேரில் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வரும் நிலையில் ஓவியா இவ்வாறு கூறியுள்ளார்.