மத்திய அரசின் நிறுவனம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி: தந்தை, மகள் கைது

0
0

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் அருகே கணபதிபுரத் தில், ‘பிராம்ட் மல்டி ஸ்டேட் கோ ஆபரேட்டிங் ஹவு சிங் சொசைட்டி’ என்ற நிறு வனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ராஜாக்கமங் கலத்தைச் சேர்ந்த ஆலிவர் நடத்தி வந்தார். இதே நிறுவனத்தின் மண்டல மேலாளராக ஆலிவரின் மகள் பவுலின் டோரா (28) செயல்பட்டு வந்தார்.

இது, மத்திய அரசு நிறுவனம் என்றும், 5 லட்சம் ரூபாய் கொடுத் தால், மாதம் 15,500 ரூபாய் சம்பளத்தில் பணி வழங்கப் படும் எனவும் விளம்பரம் செய்திருக் கிறார்கள். இதை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ளனர். பணம் செலுத்தியவர்களிடம், மேலும் 20 பேரை இணைத்தால்தான் வேலைக்கான நியமன உத் தரவு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

செருப்பன்கோடு பகுதியைச் சேர்ந்த நிஷா(28), இந்நிறுவனம் குறித்து நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வேலைக்காக இந் நிறுவனத்துக்கு, வங்கி மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்தியதாகவும், சுமார் 110 பேர் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும், வேலை வழங்காமல் அந்த நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

போலீஸார் விசாரணையில், அந்த நிறுவனம் குமரி மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பிராம்ட் மல்டி ஸ்டேட் கோ ஆபரேட்டிங் ஹவுசிங் சொசைட்டி நிறுவனத்தை நடத்திவந்த ஆலிவர் மற்றும் அவரது மகள் பவுலின் டோரா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.