மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் மீது பலாத்கார புகார் கூறிய பெண் வழக்கை வாபஸ் பெற முடிவு

0
0

அசாம் மாநிலம் நவ்கோங் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜன் கோஹைன் கடந்த 2016 ஜூலையில் மத்திய ரயில்வே இணையமைச்சராகப் பதவியேற்றார்.

இவர் தனது சொந்த தொகுதி யில் உள்ள டெரிகோன் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணையும் அவரது தங்கை யையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட திருமணமான பெண், நாகோன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி புகார் செய்தார். அந்த பெண்ணின் கணவரும் அமைச் சரும் தொலைபேசியில் உரையாடி யதாக கருதப்படும் ஆடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து பலாத்கார வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.

இதனிடையே அமைச்சர் ராஜன் கோஹைனின் மகன் நபாரன் கோஹைன், நாகோன் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், பலாத்கார புகார் கூறிய பெண், தனது குடும்பத்தை மிரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பலாத்கார புகார் அளித்த பெண், அமைச் சர் மீது கொடுத்துள்ள பாலியல் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வ தாக நாகோன் போலீஸ் நிலையத் தில் மீண்டும் மனு அளித்துள்ளார். ஆனால் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டு நீதிமன்றம் வரை சென்று விட்டது. வழக்கு குறித்து இனிமேல் நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.