மத்திய அமைச்சரின் சவாலை ஏற்கும் சல்மான் கானின் வீடியோ: வலைதளங்களில் வைரலாகும் ஃபிட்னஸ் காட்சிகள்

0
0

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவின் சவாலை ஏற்று தனது தனது ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது ‘பாரத்’ படப்பிடிப்புக்காக மால்டாவில் இருக்கிறார். அங்கிருந்தபடியே ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

சல்மான் கான் சைக்கிளிங் செல்வது மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சிகள் மேற்கொள்வது போன்ற வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். வீடியோ காட்சிகள் முடிவடையும் இடத்தில் நாம் ஃபிட் ஆக இருந்தால் பின்னர் இந்தியாவும் ஃபிட் ஆக இருக்கும் என்ற பொருளில் ஹம் பிட் தோ இந்தியா பிட் என்று தெரிவித்துள்ளார்.

 

சமூக வலைதளத்தில் இவ்வீடியோவை வெளியிட்ட சல்மான் தன் ட்விட்டர் பக்கத்தில், ”விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோரின் அற்புதமான பிரச்சாரம் ஹம் பிட் தோ இந்தியா பிட் என்பதாகும். கிரண் ரிஜூஜூவின் இந்த ஃபிட்னஸ் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதோ என்னுடைய வீடியோ” என்று பதிவிட்டுள்ளார்.

ஆன்லைனில் உடற்பயிற்சி பிரச்சாரம் கடந்த மே மாதத்தில் தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் போன்ற பல பிரபலங்கள் பலர் தங்கள் உடற்தகுதி (ஃபிட்னஸ்) வீடியோக்களை வெளியிட்டனர்.