மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ உக்கம்சந்த் மறைவு

0
0

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ உக்கம்சந்த் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த உக்கம்சந்த், 1980-ம் ஆண்டு நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் அதிமுவில் இணைந்தார். அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஜெயலலிதா அணியில் இருந்தார். 1989-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – ஜெயலலிதா அணியில் மதுராந்தகம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உக்கம்சந்த் 1996-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் பதவியை 3 முறை வகித்தவர். தற்போது திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நேற்று மாலையில் நடை பெற்றது.