மக்கள் மனதை வென்ற பொன்னம்பலம்: நன்றி கமல் சார், ஆனால் இன்னும் வருத்தமே | Ponnambalam wins viewers’ hearts

0
0

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உண்மையை சொல்லி மக்களின் மனதை வென்றுள்ளார் பொன்னம்பலம்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள மகத் அடிக்கும் லூட்டிகள் பற்றி கேட்கவே மாட்டீர்களா கமல் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கேம் ஆடுவது போன்று மகத்திடம் அது குறித்து கேட்டார் கமல்.

கேட்டதற்கு நன்றி கமல் சார் ஆனால் கண்டிக்காதது வருத்தமே.

மகத்

இந்த வீட்டில் உங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறதா என்று கமல் மகத்திடம் கேட்டார். அதற்கு உண்மை என்று ஒத்துக் கொண்டு அதற்கான அட்டையை காண்பித்தார் மகத். அதற்கு பிற போட்டியாளர்களும் உண்மை என்ற அட்டையை காட்டினார்கள்.

உண்மை

உண்மை

இப்போ இருப்பது கோபம் இருக்கும் பாலாஜியா இல்லை முகமூடி போட்ட பாலாஜியா என்று கமல் கேட்க பாலாஜியோ கோபம் இருக்கிற பாலாஜி என்றார். சக போட்டியாளர்களும் பாலாஜி சொல்வது உண்மை என்றனர். ஆனால் நித்யா மட்டும் பொய் என்றார். பாலாஜி இங்கு கோபத்தை கட்டுப்படுத்தி முகமூடி அணிந்திருக்கிறார் என்று கமலிடம் தெரிவித்தார் நித்யா.

டாக்டர்

டாக்டர்

மகத்தின் வார்த்தைகள் உங்களை புண்படுத்துகிறதா என்று கமல் சென்றாயனிடம் கேட்டார். அதற்கு அவர் உண்மை என்றார். பிற போட்டியாளர்களும் அதை ஆமோதித்தனர். நீ கோபம் அடைந்தால் சிங்கம் மாதிரி மாறிவிடுகிறாய் ஒரு நல்ல டாக்டரை பார் என்று நான் மகத்திடம் சொல்லிட்டேன் என்றார் சென்றாயன். சென்றாயன் மனதை புண்படுத்தியதை மகத்தும் ஒப்புக் கொண்டார்.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

இந்த வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கமல் பொன்னம்பலத்திடம் கேட்க உண்மை என்றார். அனைவரும் உண்மை கார்டை காட்ட இந்த வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா என்று கமல் கேட்டார். இல்லை சார் அவர் சொன்னதை சொன்னோம் என்று மழுப்பினார்கள். ஒரு சில இடத்தில் ஒழுக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் சார் அது எனக்கு பிடிக்கவில்லை என்றார் பொன்னம்பலம்.

ஷாரிக்

ஷாரிக்

உங்கள் நடவடிக்கைகள் பொன்னம்பலத்திற்கு எரிச்சலூட்டுகிறதா என்று கமல் யாஷிகாவிடம் கேட்க அவர் உண்மை என்றார். உங்களுக்கு மிகவும் பிடித்தவர் மும்தாஜ் என்று ஷாரிக்கிடம் கமல் கூற பொய் என்றார். அப்படி என்றால் யாரை மிகவும் பிடிக்கும் என்று கமல் கேட்டதற்கு ஐஸ்வர்யா என்றார்.