மகாராஷ்ட்ராவை தொடர்ந்து உத்தரப் பிரதேசம்.. ஜூன் 15 முதல் பிளாஸ்டிக் தடை..! | After Maharashtra, Uttar Pradesh to ban plastic from July 15

0
0

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடையை அறிவித்துள்ளார். இதன் மூலம் இனி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கிளாஸ் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாது.

முதல் அறிவிப்பு

மகாராஷ்டிரா அரசு மார்ச் 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இனி மாநிலத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பேக், ஸ்பூன், பிளேட், PET மற்றும் PETE பாட்டில், தெர்மாகோல் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, விநியோகம் செய்யவோ, சேமிக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

3 மாதம் அவகாசம்

இதை முழுமையாக அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு 3 மாதம் அவகாசம் கொடுத்த நிலையில் ஜூன் 23 உடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்தது. தற்போது பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாகப் புழக்கத்தில் இருந்து நீக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

கடுமையான அபராதம்

இதைக் கடைப்பிடிக்காமல் இருக்கும் மக்கள் முதல் முறை தண்டனையாக 5,000 ரூபாய் அபராதமும், 2வது தண்டனைப் பெறுபவர்கள் மீது 10,000 ரூபாயும், 3வது முறை தண்டனை பெறுபவர்கள் மீது 25,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனையும் அளிக்கப்படும் என இம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ.15,000 கோடி வர்த்தக

மகாராஷ்டிரா அரசின் உத்தரவால் மும்பையை மையமாகக் கொண்டு இருக்கும் பல பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகள் முடங்கும். இதனால் 15,000 கோடி ரூபாய் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் 3 லட்ச வேலைவாய்ப்புகளும் பாதிக்கிறது எனப் பிளாடிக் பை உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.