மகளிர் ஹாக்கியில் இந்தியா தோல்வி – இந்து தமிழ் திசை

0
0

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உலகக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – அயர்லாந்து அணிகள் நேற்று முன்தினம் கால் இறுதியில் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் கோல்கள் ஏதுவும் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப் பட்டது. இதில் அயர்லாந்து 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன் னேறியது. அரை இறுதியில் ஸ்பெயினுடன் மோதவுள்ளது அயர்லாந்து. மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மோதவுள்ளன.