மகத் ஏன் இப்படி லூட்டி அடிக்கிறார் தெரியுமா?: வெங்கட் பிரபு விளக்கம் | Venkat Prabhu’s amazing explanation for Magath’s attrocities

0
0

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மகத் அடிக்கும் லூட்டிக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கும் சிங்கிள்ஸ் மட்டும் அல்ல குடும்பஸ்தர்களும் மகத்தை திட்டி, சபித்துக் கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா என்று பார்வையாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அந்த புள்ள யாஷிகாவை கட்டிப்பிடித்து அநியாயம் பண்ணுகிறார்.

ஜூஸ்

யாஷிகாவை ஜூஸ் போடுகிற மாதிரி இப்படி புழிகிறானே என்று மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்கள் பங்கிற்கு மகத் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள்.

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

காதலியை வைத்துக் கொண்டு இப்படியா செய்வது என்று மகத் பற்றி பொன்னம்பலம் மற்றும் சென்றாயன் ஆகியோர் பேசினார்கள். இந்த கூத்தை எல்லாம் அந்த காதலி டிவியில் பார்த்துவிட்டு கஷ்டப்படாதா. அந்த பொண்ணு இப்படி செய்தால் இவன் சும்மா இருப்பானா என்று பொன்னம்பலம் கேட்கிறார். கவனத்தை ஈர்க்கவே மகத் இப்படி செய்வதாகவும் அவர் கூறுகிறார்.

மிஸ்

மகத் செய்வதை எல்லாம் பார்த்தால் காதலியை மிஸ் பண்ணுவதாக தெரியவில்லையே என நடிகர் சதீஷ் ட்வீட்டினார். அதை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு பலே விளக்கம் அளித்துள்ளார்.

வெங்கட் பிரபு

காதலியை மிஸ் பண்ணுவதால் தான் ப்ரோ அவன் அப்படி நடக்கிறான் என்று சதீஷுக்கு வெங்கட் பிரபு பதில் அளித்தார். ஆமா ஆமா யார் கேட்டாலும் அப்படியே சொல்லுங்க என்று பதிலுக்கு கலாய்த்தார் சதீஷ்.

ஆதரவு

மகத்தை ஆதரிக்கவும் ஆட்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் இந்த மனுஷன் கேட்கிற கேள்வியிலும் நியாயம் உள்ளது.