மகத்திற்கும், எனக்கும் இடையே நட்பு இல்லை: கமலிடம் உண்மையை சொன்ன யாஷிகா | I fell in love with Mahat: Yashika

0
0

சென்னை: மகத் மீது காதலில் விழுந்ததாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.

காதலி இருக்கிறார், அவரை மிஸ் பண்ணுகிறேன் என்று கூறிக் கொண்டே மகத் யாஷிகாவுடன் நெருக்கமாக பழகுகிறார். இதை பார்த்த பார்வையாளர்கள் மட்டும் அல்ல பிக் பாஸுக்கும் இது நட்பு இல்லை என்பது புரிந்தது.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண் மகத், யாஷிகா இடையேயான உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா என்று கேட்க அனைவரும் ஆமாம் என்றார்கள். மகத் மட்டும் இல்லை என்றார்.

மகத் இல்லை என்று சொன்னதை பார்த்த யாஷிகாவுக்கு முகமே மாறிவிட்டது. என்னடா பழகுறதும் பழகிட்டு இப்படி சொல்லிட்டானே என்பது போன்று கவலையாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து கமல் ஹாஸன் மகத்திடம் கேட்டார். அதற்கு மகத்தோ, எனக்கு யாஷிகாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அது எப்படி சரியா சொல்வது என்று தெரியவில்லை சார் என்றார்.

அதற்கு கமலோ, அய்யோ, சரியா சொல்லியே ஆக வேண்டும் என்றார். யாஷிகா கூறியதாவது, நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது மகத்துடன் ஸ்பெஷல் பாண்ட் இருந்துச்சு, இப்பவும் இருக்கிறது. நான் அவர் மீது காதலில் விழுந்தேன். இருந்தாலும் அவரின் நிலைமை எனக்கு புரிகிறது என்றார்.

உண்மையை சொன்ன யாஷிகாவை கமலும், பார்வையாளர்களும் வாழ்த்தினார்கள்.