பேஸ்புக்கில் குடியரசுத் தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: தலைமறைவாகி அமெரிக்க சென்றவர் ஒருவருடத்திற்குப் பிறகு கைது

0
0

குடியரசு தலைவர் பெயரில் பேஸ்புக்கில் போலி பாராட்டுக் கடிதம் வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெங்களூரு மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார்.

ஹரி கிருஷ்ணா மாரம் இவரது வயது 45லிருந்து 50க்குள் இருக்கும், ஒரு வருடத்திற்கு மேலாக அமெரிக்காவில் இருந்தவர் இம்மாதம் பெங்களூருக்கு திரும்பினார். இந்நிலையில் புதுடெல்லி சைபர் கிரைம் போலீஸாரால் நேற்று புதன் கிழமை அவர் பெங்களூருவில் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ஊடக செயலாளர் அளித்திருந்த புகார் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கை, சைபர் பிரிவின் காவல் உதவி ஆய்வாளர் பானு பிரதாப் விசாரணை செய்துவந்தார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி இவர் எழுதிய புத்தகத்திற்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதத்தை மராம் கூறியதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

மராம் தனது விளம்பரத்திற்காகவும் இவர் எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் ஏராளமான வாசகர்களிடம் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்திலும் போலியான கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

இவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட நேரம், மராம் அமெரிக்காவில் இருந்தார். தொடர்புகொண்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை.

புதுடெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணையில் வெளியில் முடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டத்திற்கான ஒரு மேலாண்மைக் கல்லூரி நடத்தி வருகிறார். மருத்துவப் படிப்புக்கான பி.பார்மா கல்வி நிறுவனத்தையும் இவர் நடத்திவருவதாகத் தெரிகிறது.

நேற்று இவர் புதுடெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். போலீஸார் போலி கடிதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அவரது லாப்டாப் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.