பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பெரும் போராட்டம்: ஸ்தம்பித்தது ஹைதி; உத்தரவு வாபஸ்

0
0

ஹைதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து விலை உயர்வை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றது.

ஹைதி நாட்டில் அண்மையில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் திரண்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அரசுக்கு எதிராக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சில மணிநேரங்களில் மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. ரோடுகளில் டயர்கள் மற்றும் மரக் கட்டைகளை போட்டு தீயிட்டு கொளுத்தினர். கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ஹைதி முழுவதும் பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் பரவியதும் ஹைதி தீவுக்கு செல்லும் விமானப் போக்குவரத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்கா கூறியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் வேறு வழியின்றி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை ஹைதி அரசு திரும்பப் பெற்றது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.