பூரி ஜெகந்நாதர் கோயிலில் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க எதிர்ப்பு

0
0

பூரி ஜெகந்நாதர் கோயிலில் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் அனைவரையும் மத வேறுபாடு இல்லாமல் அனுமதிப்பது குறித்து கோயில் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு ஜெகந்நாதர் கோயிலின் தலைமை அமைப்பான முக்தி மண்டபத்தின் தலைவரும் கோவர்த்தன் பீட சங்கராச்சாரியாருமான நிஸ்சலானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘ஜெகந்நாதர் கோயிலுக்கும் எல்லோரையும் அனுமதிப்பது சனாதன மதத்தின் பாரம்பரியத்துக்கு எதிரானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார்.

கோயிலில் பாரம்பரிய உரிமை பெற்ற ஒடிசா அரச குடும்பத்தைச் சேர்ந்த கஜபதி ராஜா திவ்யசிங்க தேவ் கூறுகையில், ‘‘மதம் மற்றும் ஜெகந்தாதர் கோயில் விவகாரங்களில் கோவர்த்தன பீட சங்கராச்சாரியார் முடிவே இறுதியானது. பாரம்பரியத்தை எதற்காக மாற்ற வேண்டும்? தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில், இந்துக்கள் அல்லாதவர்களையும் கோயிலுக்குள் அனுமதித்தால் அரசால் முழு பாதுகாப்பு அளிக்க முடியுமா?’’ என்றார்.