பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

0
0

பூச நட்சத்திரத்தின் அதிபதி `நீதிமான்’ என்று போற்றப்படும் சனீஸ்வர பகவான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாகவும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பீர்கள் மிகக் கடுமையான பிரச்னைகளுக்குக்கூட எளிதாகத் தீர்வு கண்டு சமாளித்துவிடுவீர்கள் தெய்வ பக்தி நிறைந்திருக்கும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள் பல துறைகளிலும் விஷய ஞானம் பெற்றிருப்பீர்கள் வீடு வாகன வசதிகளைப் பெற்றிருப்பீர்கள் பெற்றோரிடமும் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடமும் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள் மனோ திடம் கொண்டவர்களாகவும் எப்போதும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள் எப்படிப்பட்ட நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள் அரிய பல காரியங்களைச் சாதித்தாலும் `இந்தப் பூனையும் பால் குடிக்குமா39 என்று நினைப்பதுபோல் அடக்கமாகக் காணப்படுவீர்கள் பூசம் நட்சத்திரல் பிறந்தவர்கள் இயல்பிலேயே இரக்க மனம் பெற்றிருக்கும் நீங்கள் அனைவருக்கும் உதவி செய்ய நினைப்பீர்கள் எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் சவாலான காரியங்களையும்கூட சாமர்த்தியமாகத் திட்டமிட்டு கச்சிதமாக முடிப்பீர்கள் மனசாட்சிக்கு அஞ்சி நடப்பீர்கள் மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள் உறவினர்களும் நண்பர்களும் வந்துவிட்டால் நண்பர்களுக்கே முக்கியத்துவம் தருவீர்கள் உற்றார் உறவினர் சூழ பெரிய குடும்பமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள் சிக்கலான விஷயங்களைக்கூட நுட்பமாக அலசி ஆராய்ந்து முடிவு சொல்வீர்கள் அடிக்கடி கோபப்படுவீர்கள் சற்று கர்வமும் பெற்றிருப்பீர்கள் எந்தச் சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் தலைமை ஸ்தானத்தை வகிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் கொண்டிருப்பீர்கள் கற்பனைத் திறன் அதிகம் பெற்றிருப்பீர்கள் கதை கவிதை எழுதுவதில் நாட்டம் இருக்கும் மற்றவர்கள் செய்த உதவியை மறக்காமல் திருப்பிச் செய்துவிடுவீர்கள் பழைமையை நேசிக்கும் அதே சமயத்தில் புதுமையையும் விரும்புவீர்கள்சமூகத்தில் முக்கியப் பிரமுகராக இருப்பீர்கள் புகழ் பெற்ற பல பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் சகல யோகங்களும் உண்டாகும்  இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்பூசம் 1-ம் பாதம்நட்சத்திர அதிபதி – சனி ராசி அதிபதி – சந்திரன் நவாம்ச அதிபதி – சூரியன்பூசம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் எதையும் உடனடியாகவும் விரைவாகவும் செய்து முடிக்க விரும்புவீர்கள் சோம்பேறித்தனம் என்றாலே காததூரம் ஓடுவீர்கள் பலர் கூடியிருக்கும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள் அடிக்கடி தந்தையுடன் வாக்குவாதம் செய்வீர்கள் விடுதியில் தங்கிப் படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள் சிறு வயதிலேயே தலைமைப் பண்பைப் பெற்றிருப்பீர்கள் தவறு செய்ய மாட்டீர்கள் மற்றவர்கள் தவறு செய்வதையும் கண்டிப்பீர்கள் கோடைக்காலத்தில்கூட சூடாகச் சாப்பிடவே விரும்புவீர்கள் உங்கள் விருப்பப்படியே மண வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவு இருக்கும் சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவீர்கள் நவாம்ச அதிபதி சூரியனாக இருப்பதால் அடிக்கடி உஷ்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள் எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லதுபூசம் 2-ம் பாதம்நட்சத்திர அதிபதி – சனி ராசி அதிபதி – சந்திரன் நவாம்ச அதிபதி – புதன்பூசம் 2-ம் பாதத்துக்கு உச்சம் பெற்ற கன்னி புதன் நவாம்ச அதிபதியாக இருப்பதால் நகைச்சுவையாகப் பேசுவீர்கள் ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று விரும்புவீர்கள் பெற்றோரிடம் மிகுந்த அன்புகொண்டிருப்பீர்கள் அவர்கள் சொல்வதைத் தட்டாமல் தயங்காமல் செய்வீர்கள் உறவினர்களுடன் அவ்வளவாக நெருங்கி உறவாட மாட்டீர்கள் சில நேரங்களில் பிரச்னைகளைக் கண்டு கவலைப்படுவீர்கள் மற்றவர்களுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புவீர்கள் வாழ்க்கைத் துணையிடமும் பிள்ளைகளிடமும் அதிகப் பிரியம் வைத்திருப்பீர்கள் பகைவர்களுக்கும் இரங்கும் மனம்கொண்டிருப்பீர்கள் ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் பொறுமையுடன் இருந்து முடித்துவிடுவீர்கள் ஏழை எளியவர்களிடம் இரக்கம்கொண்டு முடிந்த உதவிகளைச் செய்வீர்கள் குடும்பத்துக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பீர்கள் திரைப்படங்களைப் பார்ப்பதைவிட பத்திரிகை படிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள் பூசம் 3-ம் பாதம்நட்சத்திர அதிபதி – சனி ராசி அதிபதி – சந்திரன் நவாம்ச அதிபதி – சுக்கிரன்எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பார்ப்பவர்கள் உங்கள் வயதைக் குறைத்துச் சொல்லும் அளவுக்கு இளமையாகக் காட்சி அளிப்பீர்கள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்வீர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் இயற்கை எழில் சூழ்ந்த வீட்டில் வாழ நினைப்பீர்கள் நவீன டிசைனில் ஆடை ஆபரணங்களை வாங்க விரும்புவீர்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள் மிகுந்த தெய்வபக்தி கொண்டிருப்பீர்கள் சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்குக் கொடுக்கும் குணம் பெற்றிருப்பீர்கள் அடிக்கடி வாகனங்களை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள் சண்டையைவிட சமாதானத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் நினைத்த காரியத்தை எப்பாடுபட்டாவது சாதித்தே தீருவீர்கள் வீட்டில் செல்லப் பிராணிகளை பிரியமுடன் வளர்ப்பீர்கள்பூசம் 4-ம் பாதம்நட்சத்திர அதிபதி – சனி ராசி அதிபதி – சந்திரன் நவாம்ச அதிபதி – செவ்வாய்நீங்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே விரும்புவீர்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறைகொண்டிருப்பீர்கள் எந்தச் சூழ்நிலையிலும் உறவினர்களை உதாசீனப்படுத்தவோ விட்டுக்கொடுக்கவோ மாட்டீர்கள் அனைத்துச் சுகங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள் பேச்சாலேயே காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள் சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் பிள்ளைகளை அதிகம் நேசிப்பீர்கள் அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள் அவ்வப்போது ஏதேனும் ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள் சில நேரங்களில் முன்கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பிறகு அதற்காக வருந்தவும் செய்வீர்கள் வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்துகொண்டு செயல்படுவீர்கள் எப்போதும் இளமையாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒப்பனை செய்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்வழிபடவேண்டிய தெய்வம் ஶ்ரீ தட்சிணாமூர்த்திஅணியவேண்டிய ரத்தினம் முத்துவழிபடவேண்டிய தலம் திருவெண்காடு திருநள்ளாறு