புதுக்கோட்டை வேளாண் அலுவலர் கொலை வழக்கில் பெண் பணியாளர் கைது

0
0

புதுக்கோட்டை வேளாண் அலுவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி ராஜா காலனியைச் சேர்ந்தவர் ஆர்.பூபதி கண்ணன்(48). இவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் வேளாண் அலுவல ராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அனுராதா. இவர், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த மாதம் 27-ம் தேதி அலுவலகப் பணிகளை முடித்து விட்டு, தனது காரில் பூபதி கண்ணன் திருச்சிக்குப் புறப்பட் டார். அவரது காரில், உடன் தட்டச்சராகப் பணிபுரியும், திருச்சி அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.சவுந்தர்யாவும்(38) சென்றுள்ளார்.

இந்நிலையில், மாத்தூர் அருகே காட்டுப் பகுதியில், உட லில் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் பூபதி கண்ண னின் சடலம் கிடந்தது மறுநாள் தெரியவந்தது. இதுகுறித்து, மாத்தூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையின்படி, கொலை நடந்த இடத்தில் அன்று இரவு பூபதி கண்ணனும் சவுந்தர்யாவும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு வர், கண்ணனை கொலை செய்து விட்டு ஓடிவிட்டார். அதன்பிறகு, அங்கிருந்து சவுந்தர்யா நடந்தே தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆனால், கொலை செய்தவர் யாரென்று தெரியாது என போலீ ஸாரிடம் சவுந்தர்யா தெரிவித்துள் ளார். இதையடுத்து சவுந்தர்யாவை கைது செய்த மாத்தூர் போலீஸார், கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறி யது: சவுந்தர்யாவின் கணவர் சுரேஷ். அரசு ஊழியரான சுரேஷ் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து சில ஆண்டு களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாராம். அதன் பிறகு, கருணை அடிப்படையில் சவுந்தர்யாவுக்கு புதுக்கோட்டை யில் அரசு வேலை கிடைத்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த அலுவலகத் தில் பணியாற்றிய பூபதி கண் ணன், திருச்சிக்கு காரில் தனது வீட்டுக்கு செல்வதால் சவுந்தர்யா வும் அவருடன் காரில் சென்று வந்துள்ளார். அப்போது, இருவருக் கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இருவருக்கும் இடையே பண பரிமாற்றமும் இருந்துள் ளது. பணம் குறித்தும், சவுந்தர்யா வுக்கு வேறு ஒருவருடன் நட்பு இருந்தது குறித்தும் பூபதி கண்ணன் கண்டித்துள்ளார். இத னால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பூபதி கண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத ஒருவர் கொலை செய்ததாக கூறும் சவுந்தர்யா, அவரைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார். எனினும், சவுந்தர்யாவிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுந்தர் யாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு உட்படுத்தும்போது கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றனர்.