புதிதாக 9 லட்சம் குடியிருப்புகள், வீடுகள்: பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

0
0

நகர குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி யில் 9 லட்சத்து 8 ஆயிரம் குடி யிருப்புகள், வீடுகள் கட்டித் தரப்படும் என்று பேரவையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுத்துறை, வீட்டு வசதித் துறை, நிதித்துறை மானி யக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்ததுடன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் -2023 குடிசைப் பகுதி களற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ் நகர குடிசைப் பகுதிவாழ் குடும்பங்களுக்கு ரூ.58 ஆயிரத்து 356 கோடி செலவில் 9 லட்சத்து 8 ஆயிரம் குடியிருப்புகள், வீடுகள் வரும் 2023-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டு தமிழகத்தில் உள்ள நகரங்கள் குடிசைப் பகுதிகள் அற்றதாக மாற்றப்படும். இவற்றில் 4 லட்சத்து 80 ஆயிரம் குடியிருப்புகள், வீடுகள் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் கட்ட ரூ.19 ஆயிரத்து 537 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மீதமுள்ள 4 லட்சத்து 28 ஆயிரம் குடியிருப்புகள், வீடுகள், ரூ.38 ஆயிரத்து 818 கோடியில் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.4 ஆயிரத்து 247 கோடியில் 38 ஆயிரத்து 617 அடுக்குமாடிக் குடி யிருப்புகள் கட்டப்படும். உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.4 ஆயிரத்து 648 கோடியில் தமிழ்நாடு நகர ஏழைகளுக்கான வீட்டு வசதி மற்றும் உறைவிட மேம்பாட்டிற்கு புதிய திட்டம் செயல் படுத்தப்படும்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 72 ஆயிரம் அடுக்குமாடி குடி யிருப்புகள் மேம்படும் வகையில் ரூ.70 கோடியில் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெறும்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.274 கோடி யில் ஆயிரத்து 792 குடியிருப்பு கள் கட்டப்படும். சென்னை அரும்பாக்கத்தில் 7.14 ஏக்கரில் ரூ.690 கோடியில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டப் படும்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் 15 ஏக்கரில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் வாடகைக் குடியிருப்புகள் ரூ.550 கோடியில் கட்டப்படும். 10 ஆயிரம் சதுரஅடிக்கு உட்பட்ட வளர்ச்சிகளுக்கு திட்ட அனுமதி 30 நாட்களில் வழங்கப்படும். மெட்ரோ ரயில் வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக தளப்பரப்பு குறீயீடு (FSI) வழங்கப்படும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.