பி.எம்.டபுள்யூ கார் ஓட்டிய ஜூலி: இம்புட்டு வேகம் ஆகாதுன்னு எச்சரித்த நெட்டிசன்ஸ் | Julie drives a BMW car

0
0

சென்னை: ஜூலி பி.எம்.டபுள்யூ கார் ஓட்டியபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஜூலி தற்போது கோலிவுட் ஹீரோயின்களில் ஒருவர். அவர் நடித்த அம்மன் தாயி படம் ஆடி மாதம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் ஜூலி ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

கார்

தனது தோழர் மார்க்குடன் பி.எம்.டபுள்யூ காரில் நெடுந்தூரம் சென்றதாகக் கூறி புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார் ஜூலி.

கலாய்

காரின் ஸ்பீடோமீட்டர் ஜீரோ கிலோமீட்டர் என்று காட்டியதை பார்த்து நெட்டிசன்கள் ஜூலியை கலாய்க்கிறார்கள்.

ட்விட்டர்

ஜூலி பி.எம்.டபுள்யூ காரை ஓட்டியதை பார்த்து நெட்டிசன்களால் நம்ப முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பி.எம்.டபுள்யூ வாங்க முடியும் என்றால் நாங்களும் ஆட்டைக்கு வருகிறோம் என்றகிறார்கள்.

பொய்

நின்று கொண்டிருந்த காரில் ஏறி போஸ் கொடுத்துவிட்டு பொய் சொல்கிறீர்களா போலி ஜூலி என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.

பெஸ்ட்டி

சும்மாவே ஜூலின்னா கலாய்ப்பார்கள், இப்போ பி.எம்.டபுள்யூ கார் போட்டோ வேறயா?