பிற நடிகைகள் ஆசைப்படுவது வரலட்சுமிக்கு தானாக கிடைக்கிறது: நீ நடத்துமா ராசாத்தி! | Varalaxmi to live in dark for JK

0
0

சென்னை: வரலட்சுமி சரத்குமார் பார்வையில்லாத பெண்ணாக நடிக்கும் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் பிற வாரிசு நடிகைகள் போன்று இல்லை. அடம் பிடிப்பது இல்லை, சீன் போடுவது இல்லை, நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கன்டிஷன் போடுவது இல்லை.

முக்கியமாக சினிமா துறையில் தனது அப்பா பெரிய ஆள் என்பதால் படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்களை டார்ச்சர் செய்வது இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் சமத்துப் பொண்ணு.

கார்த்திக்

திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி நடித்த மிஸ்டர் சந்திரமௌலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர்

பெயர்

தான் எந்த படத்தில் நடித்தாலும் தனது நடிப்பை பற்றி ரசிகர்கள் பேசும்படி செய்து விடுகிறார் வரலட்சுமி. வரலட்சுமியிடம் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் நச்சென்று நடித்துக் கொடுப்பார் என்று பெயர் எடுத்துள்ளார்.

ஜேகே

ஜேகே

ஜேகே இயக்கத்தில் வரலட்சுமி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் பார்வையில்லாத பெண்ணாக நடிக்கிறார். முதன்முதலாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் வரு நடிக்கிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

ஜேகே படத்தில் வரலட்சுமி நிச்சயம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துவிட்டது. இந்த படம் வரலட்சுமியின் சினிமா வாழ்வில் மறக்க முடியாத படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்கார்

சர்கார்

சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்துள்ளார் வரு. விஜய்யின் சர்கார் படத்திலும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் விரும்புவது போன்றே வித்தியாசமான கதாபாத்திரம் அவரை தேடி வந்துள்ளது. வரலட்சுமி நடிப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே பல நடிகைகள் விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.