பிறந்த குழந்தையின் கண் பார்வை வளர்ச்சி: 0 முதல் 12 மாதங்கள் வரை! | Baby Eyesight Development From 0 to 12 Months

0
0

முதல் மாதம்

குழந்தை பிறந்த முதல் மாதம், அதன் கண் பார்வைக்கு எதுவுமே புலப்படாது; அனைத்து பொருட்களும், அனைத்து மனிதர்களும் குழந்தையின் பார்வையில் மங்கலாகவே தெரிவர். இந்த கால கட்டத்தில் என்னதான் குழந்தையின் கண்கள் திறந்திருந்தாலும், குழந்தையால் எதையும் பார்க்க முடியாது என்பதே உண்மை! அப்படிப்பட்ட குழந்தையிடம் போய் அம்மாவை பார் – அப்பாவை பார் என்றால் அது என்ன செய்யும் பாவம்! இப்படியெல்லாம் கேட்டால் அது சரியாக இருக்குமா என்று யோசித்து குழந்தையை கொஞ்சி பேசிப் பழகுங்கள், அதை விடுத்து பிறந்த முதல் மாதத்திலேயே, நீங்கள் சொல்வதையெல்லாம் குழந்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்!

இரண்டாம் மாதம்

இரண்டாம் மாதம்

குழந்தை பிறந்து முதல் மாதம் முடிவடைந்து இரண்டாம் மாதம் தொடங்குகையில், குழந்தைக்கு மெதுவாக தாயின் முகம் புலப்பட தொடங்கும். அதுவும் தெளிவாக அல்லாமல், மிகவும் மங்கலாக புலப்படும்; மங்கலாக தாயின் முகம் தோன்றினாலும், தாயின் முக அமைப்பு, முக பாவனைகள் போன்றவற்றை குழந்தைகள் மிகக் கூர்மையாக உணர தொடங்குவர். மேலும் அன்னையை சுற்றி, தன்னை சுற்றி இருக்கும் அனைத்து பொருட்களுமே இந்த நிலையில் மிகவும் மங்கலாக அல்லது கண்ணுக்கே புலப்படாமல் இருக்கும்; இந்த இரண்டாம் மாதத்தில் குழந்தையால் அன்னையின் முகத்தை மட்டுமே பார்க்க முடியும்.

மூன்றாம் மாதம்

மூன்றாம் மாதம்

மூன்றாம் மாதத்தை குழந்தை அடையும் பொழுது, தாயின் முகம் மங்கலான நிலையில் இருந்து சற்று தெளிவான பார்வையில் புலப்படும்; ஆனால், மிகத்தெளிவாக அல்ல. ஏன் அன்னையின் முகம் மட்டும் முதலில் புலப்படுகிறது என்ற கேள்வி, உங்கள் மனதில் எழுகிறதா? இதில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. குழந்தை தாயின் வயிற்றினுள் தான் 10 மாதங்கள் இருந்து வளர்ந்தது; ஆகையால், குழந்தையால் அன்னையின் பேச்சுக்கள் மற்றும் தொடுதல் உணர்வுகளை விரைவாக அறிந்து கொள்ள இயலும்; மேலும் அன்னையின் அருகில் இருப்பது தான் பாதுகாப்பு என்று குழந்தையின் மனம் எண்ணும்.

நான்காம் மாதம்

நான்காம் மாதம்

நான்காம் மாதத்தில், குழந்தையால் தாயின் முகத்தை மேலும் தெளிவாக காண முடியும்; தாயின் முகத்தோடு குழந்தை பயன்படுத்தும் பொம்மை போன்ற பொருட்களை அதனால் பார்க்க இயலும். தந்தை மற்றும் மற்ற உறவுகளின் முகம் மங்கலாகவே இருக்கும். மேலும் குழந்தையால், சுற்றியுள்ள பொருட்களை பார்க்க இயலாது; ஆனால், குழந்தை நீங்கள் பெரும் அனைத்தையும் சுற்றுப்புறத்தில் ஏற்படும் எல்லா சத்தத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருக்கும். குழந்தையின் கண் பார்வை மிக மெதுவாக வளரும் தன்மை கொண்டு படைக்கப்பட்டு உள்ளது; எனவே, தந்தையர்கள் இந்த பதிப்பினை படிக்கும் பொழுது மன வருத்தம் கொள்ள வேண்டாம்.

ஐந்தாம் மாதம்

ஐந்தாம் மாதம்

குழந்தை பிறந்து நன்கு மாதங்கள் முடிவடைந்து ஐந்தாம் மாதம் தொடங்கும் பொழுது, குழந்தைகள் தன தந்தையின் முகத்தை மெதுவாக அறியத் தொடங்கும். எப்படி இரண்டாம் மாதத்தில் தாயின் முகம் மிக மங்கலாக தெரிந்ததோ அதே போல், இப்பொழுது தந்தையின் முகம் மிக மிக மங்கலாக தெரியும். ஆனால், அவர் பேசுவதை குழந்தையால் மிகத்தெளிவாக கேட்க இயலும். குழந்தைகளின் மற்ற உடல் பாகங்கள் வளர்ச்சி பெற்று அது கை கால்களை ஆட்டும் பொழுது, குழந்தை வளர்ந்துவிட்டதாக தோன்றினாலும், அதன் கண் பார்வை வளர்ச்சி ஒரு வயதில் தான் பூர்த்தி அடையும் என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்துங்ள்.

ஆறாம் மாதம்

ஆறாம் மாதம்

குழந்தை ஆறாம் மாதத்தை எட்டும் பொழுது, எப்படி மூன்றாம் மாதத்தில் தாயின் முகம் லேசாக தெளிவானதோ, அதே போல் இப்பொழுது தந்தையின் முகம் தெளிவாக புலப்படத் தொடங்கும். மேலும் குழந்தை திட உணவுகளை உண்டு செரிக்கும் அளவிற்கு அதன் வயிறு மற்றும் உள்ளுறுப்புகள் சரியான வளர்ச்சியை பெற்றிருக்கும். இந்த மாதம் வரை கட்டாயம் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியது அவசியம்; முடிந்தால் ஓரிரு வருடம் அலல்து தாய்ப்பால் சுரப்பு இருக்கும் வரை பால் கொடுக்கலாம்.

ஏழாம் மாதம்

ஏழாம் மாதம்

ஏழாம் மாதத்தில் குழந்தைகள் திட உணவுகளை உண்ணத் தொடங்கும்; பல குழந்தைகலுணவினை உண்ணாமல் புறக்கணித்து அடம் பிடிக்கவும் தொடங்கும். இந்த காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையின் முகம் மற்றும் மிக நெருங்கி எப்பொழுதும் உறவாடும் பாட்டி அல்லது குழந்தை பராமரிப்பாளரின் முகம் குழந்தையின் கண்களுக்கு புலப்படும். இந்த மாதத்தில் தாய் மற்றும் தந்தையின் முகங்கள் மட்டுமே ஹைலைட்டான விஷயங்கள்; இந்த மாதத்தில் குழந்தை அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய தயாராகிறது.

எட்டாம் மாதம்

எட்டாம் மாதம்

எட்டாம் மாதத்தில் குழந்தை எட்டு எடுத்து வைக்க ஆரம்பிக்கும் என்ற கூற்று உண்டு; ஆனால், குழந்தையின் கண் பார்வை இன்னும் முழுமையான வளர்ச்சி பெறாமல் தான் குழந்தை தவழ்கிறது, நடக்க முயற்சிக்கிறது மற்றும் கீழே உள்ள பொருட்களை கையால் எடுத்து விளையாடுகிறது என்ற உண்மையை பல பெற்றோர்கள் அறிவது இல்லை.இந்த நிலையிலும் தாய் மற்றும் தந்தை மட்டுமே தெளிவாக குழந்தையின் கண்ணிற்கு புலப்படுவர்.

ஒன்பதாம் மாதம்

ஒன்பதாம் மாதம்

ஒன்பதாம் மாதத்தில், குழந்தைகள் மெது மெதுவாக நடக்கத் தொடங்குவர்; இந்த நிலையில் இன்னமும் அவர்களுக்கு தாய், தந்தை மற்றும் நெருங்கி பராமரித்து வரும் மற்றோரு நபர் என இவர்கள் மூவர் மட்டுமே குழந்தைகளின் கண் பார்வைக்கு புலப்படுவர். இவர்களை தவிர சுற்றியுள்ள எந்தவொரு பொருளும், சுவரும் அதன் நிறமும் கூட அவர்களின் கண்களுக்கு புலப்படாது.

பத்தாம் மாதம்

பத்தாம் மாதம்

பத்தாம் மாத கால கட்டத்தை குழந்தைகள் எட்டும் பொழுது அவர்களின் கண்களுக்கு தாய் மற்றும் தந்தையை சுற்றியுள்ள, அவர்கள் கையாளும் பொருட்கள் இவற்றோடு குழந்தையை சுற்றியுள்ள பொருட்கள் போன்ற இவை அனைத்தும் சற்று தெளிவாக அதிக மங்கள் தன்மையுடன் புலப்படும். குழந்தையால், இந்த நிலையிலும் பெற்றோரை தவிர மற்ற எவரையும், எப்பொருளையும் அடையாளம் காண முடியாது.

பதினொன்றாம் மாதம்

பதினொன்றாம் மாதம்

இந்த பதினொன்றாம் மாதத்தில் குழந்தை தன்னை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும், சுவர்களையும், அதன் நிறங்களையும் சற்று தெளிவாக – உள்ளது உள்ளபடியாக காண தொடங்கும்; இந்த நிலையில் குழந்தையின் கண் பார்வை வளர்ச்சி 90 சதவிகிதத்தை எட்டி இருக்கும். இதன் பின் பெற்றோர்கள் குழந்தையிடம் எதையும் பார்க்க சொல்லலாம்; ஏனெனில் குழந்தையின் பார்க்கும் திறனில் தெளிவு ஏற்பட்டு விட்டது.

பனிரெண்டாம் மாதம்

பனிரெண்டாம் மாதம்

பனிரெண்டாம் மாதம் குழந்தை ஒரு வயதை எட்ட மிச்சமிருக்கும் கடைசி 30 நாட்கள்; குழந்தை இந்நிலையில் முழுமையான அதாவது 100 சதவிகித கண் பார்வை வளர்ச்சியை பெற்று விடும். இதன் பின் பெரியவர்கள் காணக்கூடிய அனைத்தையும் குழந்தையாலும் காண இயலும்; மேலும் குழந்தையின் பார்வை பெரியவர்களை விட மிகவும் கூர்மையானதாக இருக்கும். இந்த நிலையில் குழந்தைகளை அனைத்தையும் பார்க்கச் செய்யலாம்; கண்ணையும் கருத்தையும் கவரும் இடங்களுக்கு குழந்தையை கூட்டிச் சென்று சுற்றிக் காட்டலாம்.