பிரேம்ஜி இசையில் பாடிய ஜிவி.பிரகாஷ், சைந்தவி! பார்ட்டி படு ஜோர்…! | GV.Praksh and Saindavi join together for Party!

0
0

சென்னை: பார்ட்டி திரைப்படத்திற்காக பிரேம்ஜி இசையில் ஜிவி.பிரகாஷ் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.

நாளுக்கு நாள் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இப்போது தமிழ் சினிமாவின் காதல் ஜோடி ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.

சிவா, ஜெய், ஷாம், ஜெயராம், சத்யராஜ், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் உள்ளது.

பார்ட்டி திரைப்படத்திற்காக பிரேம்ஜி இசையில் சூர்யா, கார்த்தி இணைந்து பாடிய ச்சா… ச்சா… ச்சாரே… என்ற பாடல் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், இளம் இசை ஜோடியான ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இணைந்து தேன் புது தேன் என்ற பாடலை பாடியுள்ளனர்.

இவர்களை வைத்து இந்த மெலடி பாடலை பதிவு செய்ய எண்ணிய பிரேம்ஜி, வெங்கட்பிரபுவிடம் விஷயத்தை சொன்னதும், முழு மனதோடு ஒத்துக்கொண்டாராம். அதன்பிறகு பாடலை பதிவு செய்திருக்கிறார். மேலும், இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களையுமே பிரபலங்களை வைத்து பாட வைத்துள்ளாராம் பிரேம்ஜி. பாடல் ரிலீஸ் ஆகும்போது அவர்கள் யாரென்று தெரியும் என சஸ்பென்ஸ் வைக்கிறார்.

ஹேங்கோவர் படமான பார்ட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.