பிரபுதேவா படத்தில் ‘காளகேயா’ பிரபாகர் – இந்து தமிழ் திசை

0
1

நிம்ட்டா.. கோஜ்ராஸ்.. தெல்மீ.. அர்தா போஸ்.. க்ராக்விகனா.. பூம்ளே.. – ‘பாகுபலி 2’ என்றதும் நினைவுக்கு வரும் பிரபல வசனங்கள் இவை. இந்த வசனங்களைப் பேசியபடி பயங்கர கருப்பாக, வித்தியாசமான கெட்டப்பில் வந்து மிரட்டுவார் ‘காளகேயா’ ராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாகர். அவர் தற்போது பிரபுதேவாவின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது, ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம். இப்படம் 2-வது கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. காவல் துறை உதவி ஆணையர் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார். இதனால், நடனத்தைவிட ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் விதமாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காவல் துறையை களமாகக் கொண்ட படம் என்பதால், 5 சண்டைக்காட்சி கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றையும் பிரத் யேக கவனம் செலுத்தி படமாக்க உள்ளனர். பிரபுதேவாவும், நிவேதா பெத்துராஜும் கணவன், மனைவியாக நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.