பிரபுதேவாவின் ‘லக்‌ஷ்மி’: ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலீஸ்

0
0

பிரபுதேவா நடித்துள்ள ‘லக்‌ஷ்மி’ படம், ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘லக்‌ஷ்மி’. ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இணைந்துள்ள இந்தப் படம், நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஒரு தீம் பாடல் உள்பட மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, ஆண்டனி எடிட் செய்துள்ளார்.

இந்தப் படத்தை ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியிட அனுமதி கேட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த தயாரிப்பாளர்கள் சங்கம், அவர்கள் கேட்ட தேதியில் வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘தேவி 2’ படத்துக்காக மறுபடியும் விஜய் – பிரபுதேவா கூட்டணி இணைகிறது. முதல் பாகத்தில் நடித்த தமன்னா உள்பட மொத்தம் 3 ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.