பிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை! | Actress Anupama went unconscious in shoot

0
0

ஐதராபாத்: நடிகை அனுபமா தெலுங்கு பட படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தமிழில் தனுஷின் கொடி திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் அவர். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக உள்ள அனுபமா, இயக்குனர் திரினாத ராவ் நக்கினே இயக்கத்தில் ஹலோ குரு ப்ரேமகோசமே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் நடிகை அனுபமா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் பிரகாஷ்ராஜுடன் வசனம் பேசி நடித்துக்கொண்டிருந்த அனுபமா திடீரென மயங்கி விழுந்துள்ளார். படக்குழுவினர் உடனடியா அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். ஏற்கனவே குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அனுபமாவுக்கு, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அயர்வால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.