பியூஸ் மானுஷ் மீது 3 பிரிவுகளில்  வழக்கு

0
0

சமூக வலைதளம் மூலம் அரசுக்கு எதிராக  பேச தூண்டுவதாக இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சேலம்-சென்னை இடையே  எட்டு வழிச்சாலை அமைக்கப்படு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் பேசிய காணொலி ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து  உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸார் பியூஸ் மானுஷ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)  153 (கலகம் செய்ய தூண்டுதல்), 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்),  506(1) (கொலை மிரட்டல் விடுத்தல்)  ஆகிய பிரிவுகளின்  கீழ்  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.