பின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்…! | Facts About Edward Mordrake, The Man with Two Face!

0
1

யார் இவர்?

இவர் பெயர் எட்வர்ட் மோர்திரேக். பலரும் இவரை மோர்திரேக் என்று பரவலாக அழைத்து வந்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவர் ஒரு லெஜண்டாட கருதப்பட்டார் என்று உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன. இவர் 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த உயர்ந்த குடும்பத்தில் பிறந்த நபராக கருதப்படுகிறார்.

இரண்டு முகம்!

இரண்டு முகம்!

இரண்டு தலை கொண்டிருந்த நபர்கள் குறித்து கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எட்வர்ட் மோர்திரேக்க்கு ஒரே ஒரு தலை தான்.

ஆனால், முகம் மட்டும் இரண்டு. எப்போதும் போல முன்னே ஒரு புறமும், வியக்கும் வகையில் தலையின் பின்புறத்தில் ஒரு முகமும் இவர் கொண்டிருந்தார் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டிருக்கிறது.

Image Source : Snopes

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

அட ரெண்டு முகம் இருந்தா என்ன பிரச்சனை இருக்க போகுது. தனிமையே இருக்காது. ஜாலியா அவர் இன்னொரு முகம் கூட பேசிட்டு இருக்கலாமே.. என்று நினைக்கிறீர்களா? எட்வர்ட் மோர்திரேக் இரண்டாவது முகம் தான் அவரது நிம்மதியையே கெடுத்தது இது தான் அந்த முகம் அவருக்கு ஏற்படுத்திய பிரச்சனைகள்.

Image Source: Snopes

இரண்டாம் முகம்!

இரண்டாம் முகம்!

எட்வர்ட் மோர்திரேக்கின் இரண்டாம் முகத்தினால் பார்கவோ, பேசவோ, சப்தமாக கத்தவோ முடியாது. ஆனால், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது கேலி செய்வது போலவும், மோகமாக இருக்கும் போது மகிழ்ந்து சிரிப்பது போன்ற குணாதிசயம் கொண்டிருந்தது. இதனாலேயே எட்வர்ட் மோர்திரேக் நிம்மதி இழந்து காணப்பட்டார் என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.

கெஞ்சினார்!

கெஞ்சினார்!

எட்வர்ட் மோர்திரேக், பல மருத்துவர்களிடம் தனது இரண்டாவது முகத்தை அகற்றி விடவும் என கேட்டு கெஞ்சினாராம். ஆனால், யாரும் அதற்கு முன்வரவில்லையாம். தனது இரண்டாம் முகம் ஒரு பேய். அது இரவுகளில் என்னிடம் நரகத்தை பற்றி பேசிகிறது. என் நிம்மதியை கொல்கிறது என்று கூறி மன்றாடியும் மருத்துவர்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

தற்கொலை!

தற்கொலை!

எத்தனை நாள் தான் இந்த இரண்டாம் முகத்தின் தொல்லையுடன் நிம்மதி இல்லாமல் வாழ முடியும் என்று கருதிய எட்வர்ட் மோர்திரேக். ஒரு கட்டத்தில் அதன் தொல்லை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது 23வது வயதில் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

எப்போது?

எப்போது?

முதன் முதலில் இப்படி ஒருவர் இருந்தார் என்று பாஸ்டன் போஸ்டில் 1895ல் வெளியான கட்டுரையில் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பின் பல காலக்கட்டத்தில் எட்வர்ட் மோர்திரேக் குறித்து… இப்படி ஒரு விசித்திர மனிதர் இருந்தார் என்று செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.

ஏன், இன்றும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக இணைய செயலிகளில் எட்வர்ட் மோர்திரேக் குறித்த தகவல் ஒரு சில புகைப்படங்களுடன் பரவுவதை நாம் காண முடியும்.

உண்மையா?

உண்மையா?

இந்த தகவல் / கதையை படிக்கும் போதே சிலருக்கு… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்ற எண்ணம் எழலாம். அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், உண்மையாகவே இப்படி ஒருவர் இங்கிலாந்தில் வாழ்ந்தார் என்று கூறப்படும் சம்பவமானது முற்றிலும் பொய். 19ம் நூற்றாண்டில் துவங்கிய இந்த கதை. நீண்ட காலம் கழித்து 2000களில் மீண்டும் மீம், டிரால் மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளில் இடம்பெற துவங்கியது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

எட்வர்ட் மோர்திரேக் பற்றி முதன் முதலில் கட்டுரையில் எழுதிய அந்த ஆசிரியர், பத்திரிகையில் பல விசித்திர உடல் வடிவம் கொண்ட மனிதர்கள் என்ற தலைப்பில் பலர் குறித்து எழுதி இருந்தார் என்று அறியப்படுகிறது.

இவர் அந்த காலத்தில் பத்திரிகையின் பிரதிகள் அதிகம் விற்க வேண்டும், நிறைய வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி சுவாரஸ்யமாக எழுதினார் என்று கூறப்படுகிறது.

எனவே, எட்வர்ட் மோர்திரேக் என்ற நபரோ, அவருக்கு இரண்டு தலைகள் என்று கூறி பரப்பப்படும் படங்களும், தகவல்களும் போலியானவையே!