பித்ரு தோஷத்தை வீட்டில் செய்வது எப்படி? மந்திர மற்றும் பூஜை விளக்கம்! | How to do Pitru Paksha Puja at Home for Pitra Dosh Removal Part 1

0
0

இந்த வருடம் எப்பொழுது?

இந்த பித்ரு சடங்கு மற்றும் சாஸ்திரம் செய்து முடிக்க வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாள்கள் மிக விஷேஷம் பொருந்தியதாக இருக்கும்; இந்த நாள்கள் ஒவ்வொரு வருடமும் மாறுபடலாம். இந்த வருடத்தில் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் அதற்கடுத்த மாதமான அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை பித்ரு தோஷ நிவர்த்தி நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. இறந்த நபர்கள் மரித்துப்போன தேதி மற்றும் திதிகளின் அடிப்படையில் பூஜைகள் மற்றும் புனஸ்கரங்கள் நடத்தப்பட்டு, பித்ரு தோஷம் முற்றிலுமாக நீக்கப்படும். இது பொதுவாக மஹாலயா அமாவாசை மற்றும் பூர்ணிமா திதியில் நிகழும்; இந்த அமாவாசையை பித்ரு மோட்ச அமாவாசை என்றும் அழைப்பர்.

வீட்டில் எப்படி செய்வது?

வீட்டில் எப்படி செய்வது?

இந்த தோஷம் செய்வதற்கு முந்தைய நாள் இறைச்சி உணவுகளை வீட்டில் சமைத்தல் கூடாது; பித்ரு தோஷ நாளின் பொழுது, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவருந்த வேண்டும்; மேலும் இரவில் பழங்கள் மற்றும் பால் போன்றவற்றை அருந்தலாம். வீட்டின் தெற்கு திசையில் பூஜை முறைகளை அமைத்து, ஓம்கார் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்து, குரு, விநாயகர், அஸ்வினி தேவதைகள், மஹா விஷ்ணு போன்ற அனைத்து கடவுள்களையும் வணங்கி, பூஜை செய்ய வேண்டும்.

என்ன மந்திரம்?

என்ன மந்திரம்?

தண்ணீர் நிறைந்த காப்பர் பாத்திரத்தை இடது கையில் வைத்து, வலது கையால் பாத்திரத்தை மூடிக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:

“கங்கா யமுனாசச்சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிடம் குரு”

ஏழு புனித தளங்கள்

ஏழு புனித தளங்கள்

பின் ஏழு புனித தளங்களை பிரார்த்தித்து, அந்த தளங்களை வணங்கி மரியாதை செலுத்தும் வண்ணம் கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:

“அயோதா மதுரா மாய காஞ்சி அவந்திகா புரி திவராவதி சைவ சாப்டா இதே மோக்ஷ தயகா”

சங்கல்பம்

சங்கல்பம்

இந்த மந்திரத்தை முடித்த பின், கீழ்க்கண்ட சங்கல்பத்தை எடுக்க வேண்டும்.

ஸ்ரீ உமா மகேஸ்வரா, ஸ்ரீ லட்சுமி நாராயணா, ஸ்ரீ வாணி பிரம்மா தேவா, சகல தேவதை, பித்ரு தேவதை ப்ரீதியார்தம், பித்ரு பக்ஷ புனைய காலே ——— (நீங்கள் செய்யும் திதியின் பெயரை சொல்லி) ஸ்ரார்த்தம் தைல தர்ப்பணம் ரூபேண அதிய கரிஷே

முன்னோர் வணக்கம்

முன்னோர் வணக்கம்

பின்னர் 40 வருடங்களுக்கு முன்னர் இறந்த தந்தை வழி மற்றும் தாய்வழி உறவு முன்னோர்களை வணங்க மற்றும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய சில வினாடிகள் கீழ்க்கண்டவாறு கூறி மௌனமாய் தியானிக்கவும்.

“என் அனைத்து முன்னோர்களே! தயவு செய்து நான் அளிக்கும் இந்த சமர்ப்பணத்தை ஏற்று என்னை ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்; என் ஆயுள் உள்ள வரை எனக்கு உங்கள் ஆசியும் அருளும் வேண்டும்; என்னை நல்வழியில் வழிநடத்திச் செல்லுங்கள் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”

இதன் பிறகு தாமிர பாத்திரத்தில் இருந்து ஒரு கரண்டி தண்ணீரை எடுத்து வலது கையில் ஊற்றி,உங்கள் உடல் மற்றும் தலை முழுதும் தெளித்துக் கொள்ளுங்கள்; இது உங்கள் பாவங்கள் உங்களை விட்டு நீங்கியதை உங்களுக்கு உணர்த்துகிறது.; இந்த செயல் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டையும் பரிசுத்தமாக்கும்.

முன்னோரை அழைத்தல்

முன்னோரை அழைத்தல்

தர்ப புற்களை எடுத்து தெற்கு திசையில் சதுர வடிவில் வைத்து, அதை ஒரு மோதிரம் போல் செய்து அதன் மீது தண்ணீர் தெளிக்கவும்; பின் அந்த மோதிரத்தை உங்கள் விரலில் மாட்டிக் கொள்ளவும். புற்களின் வடக்கு திசையை தொட்டுபிரார்த்திக்கவும்; சில எள்களை எடுத்து வலது கையில் வைத்துக் கொண்டு களின் மத்திய பகுதியை தொடவும். பின் கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவும்:

“வாசு ருத்ர ஆதித்ய சொரூபன் அஸ்மாத் பித்ருர் (அப்பா), பிதாமஹா (தாத்தா) பிரபிதா மகனாம் (கொள்ளுத்தாத்தா) மாதுர் (அம்மா), மாதா மஹா மாது பிதாமஹா (தாத்தா), பிரபிதா மகனாம் (கொள்ளுத்தாத்தா) மாதுர் பிதாமணி (தாய்வழி முன்னோர்கள்) மாதுர் பிரபிதா மஹீனாம் த்யாயாமீ (தியானியுங்கள்) அஸ்மின் கூர்க்கா உபாயம் வம்ச பிதுர்நாம் ஆவாஹயாமி (முன்னோர்களை வரவேறுங்கள்) ஸ்தாப்யாமி (இடமளியுங்கள்), பூஜயாமி (வணக்கம் செலுத்துங்கள்)”

பின் எள்களை கொண்டு புற்களை தொட்டு முன்னோர்களை தியானித்து அவர்கள் புற்களின் மேல் வீற்றிருப்பதாக எண்ணி கீழ்க்கண்ட மந்திரத்தை கூறவும்: “மம வர்கத் பித்ருபியோ நமஹ” (முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துதல்) இவ்வாறு கூறி அவர்களை வரவேற்று வணங்குங்கள்.

பின் அவர்களின் தோஷத்தை நீக்கும் மந்திர சாஸ்திரங்களை அடுத்த பதிப்பில் வெளியிடுகிறோம்; அதற்கு நாளை வரை காத்திருக்கவும்.