பிக் பாஸ் மேடையில் கவிதை வாசித்த கருணாநிதி: கண் கலங்கிய கமல் | Karunanidhi’s voice heard in Bigg Boss 2 Tamil stage: Kamal gets emotional

0
0

கருணாநிதி

எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து எனக்கு தெரிந்த தமிழ் உலகில் ஒரு பிக் பாஸ் கலைஞர் அவர்கள். அவர் தமிழ், அவர் வசனம், நடிகர்கள் எல்லாம் பேசிப் பேசிப் பழகிய வசனங்கள். அவரை சுற்றி அவர் எழுதிய போலவே, வாலிபர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகள் போன்று வட்டமிடக் காரணம் என் வார்த்தை அலங்காரம் அல்ல தரங்குறையா எண்ணங்கள், வளங்குறையா எண்ணங்கள் என்றார் கமல்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

கலைஞருக்காக இங்கு கூட விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது. வெளியே நடப்பதை தெரிவிப்பது இல்லை என்ற விதி இருந்தும் அந்த விதியை மாற்றி அமைத்தோம். அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய சரித்திர செய்தி என்று எனக்குத் தோன்றியது, அவர்களுக்கும் தோன்றியது. அதை உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சொன்னார்கள்.

கவிதை

கவிதை

இதில் எனக்கு ஒரு சின்ன பெருமை உண்டு. அவர் வசனத்தை பேசிய குழந்தை, மழலை நான் எழுதிய கவிதையை அவர் படித்து பேசினார். அது நான் வாழ்ந்து நான் மடிந்த பிறகு பேசப்படும். அவர் பேசும்போதே எனக்குத் தெரியும், இப்படி ஒரு நாள் வரும் அதை மார்தட்டி ஊருக்கு சொல்லும் நாள் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். அந்த நாள், இந்த நாள் என்று கமல் கூறினார்.

கலைஞர்

கலைஞர்

உங்களுக்காக கலைஞர் அவர்கள் என் கவிதை வரிகளை நினைவுகூர்ந்தது எனக்கு புல்லரித்த தினம் அன்று. இன்று உங்களுக்காக காண்பிக்கிறோம் என்றார் கமல். கலைஞர் அவர்கள் கமல் ஹாஸன் கலைஞானி மட்டும் அல்ல கவிஞானி என்பதையும் தனது கவிதை மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்று கருணாநிதி பேசிய வீடியோவை காண்பிக்க அரங்கில் இருந்த அனைவர் முகத்திலும் துக்கத்தை காண முடிந்தது.

புல்லரிப்பு

புல்லரிப்பு

கமல் எழுதிய கவிதையை கருணாநிதி பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டுக் காண்பித்தபோது அதை பார்த்த பார்வையாளர்களுக்கு அவரின் குரலை கேட்டு புல்லரித்துவிட்டது. அந்த வீடியோவை பார்த்த கமல் கூறியதாவது, அன்று அதை கேட்டுக் கொண்டிருந்த கமல் ஹாஸனின் கண்ணும் கலங்கியது, இன்றும் கலங்குகிறது என்றார்.