பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது! | Kadaikutty singam team in big boss 2 house

0
0

ப்ரோமோஷன்:

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாகச் சென்றுள்ளது படக்குழு.

வரவேற்பு:

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி, சூரி மற்றும் பாண்டிராஜுக்கு ஆடல், பாடலுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வீட்டைச் சுற்றி காண்பித்தனர்.

பாண்டிராஜின் கேள்வி:

பாண்டிராஜின் கேள்வி:

அப்போது பாண்டிராஜ் மஹத்திடம், ‘உன் பெட் இங்க இருக்கும்போது, நீ ஏன் ஆட்டோ பிடிச்சு அங்க போன?’ எனக் கேள்வி எழுப்பினார். அதாவது அடிக்கடி பெண்கள் பகுதியில் உள்ள யாஷிகாவின் பெட்டில் சென்று மஹத் படுத்துக் கொள்வதைத் தான் அவர் அப்படிக் கேட்டார்.

கார்த்தியால் மகிழ்ச்சி:

கார்த்தியால் மகிழ்ச்சி:

ரம்பா சார், ரம்பா சார் என பார்த்திபன் ரேஞ்சுக்கு கார்த்தியைப் பார்த்து பிக் பாஸ் போட்டியாளர்கள் உருகினர். பின்னர் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அனைவரும் பேசுவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் உள்ளது.

இன்ப அதிர்ச்சி:

இன்ப அதிர்ச்சி:

எனவே, இன்று திருடன், போலீஸ் டாஸ்க் முடிவடைந்தவுடன் கடைக்குட்டி சிங்கம் படக்குழு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து, போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.