பிக் பாஸ்… உச்சகட்ட கோபத்தில் கமல்… அப்ப இன்னைக்கு ‘கச்சேரி’ கன்பார்ம்! | Kamal become anger in Biggboss Promo!

0
0

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் கோபப்படுகிறார்.

சர்வதிகார டாஸ்க் மூலமாக பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பயங்கரமாக சூடு பிடித்தது. அதிகாரத் திமிரில் ஆட்டம்போட்ட ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளி அதற்கு ஒரு முடிவு கட்டினார் பொன்னம்பலம்.

நேற்று கஜினிகாந்த் திரைப்படக் குழுவினர் வீட்டிற்குள் வந்த் லூட்டி அடித்தனர். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.

திரையில் தோன்றும் கமல்ஹாசன்… ”இன்னக்கி ராத்திரி 9 மணிக்கி பிக்பாஸ் பாக்க வாங்கன்னு சொல்றது சம்பளம் வாங்கின கடமை… அதற்கும் மேல ஒரு கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்குறதா நான் நெனச்சிகிட்டு இருக்கேன். அதை செய்யவேண்டி இருக்கு… கமலஹாசன் என்ன செய்யப்போறான்னு நீங்க வேடிக்க பாத்துகிட்டு இருக்கீங்க… பாருங்க… நீங்க வேடிக்கை பாருங்க நான் வேலையைப் பார்க்கிறேன்…” என்று சொல்லிவிட்டு வேகமாகச் செல்கிறார்.

கடந்த ஒருவாரமாக பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் நடந்தன. அதுமட்டுமல்லாமல் விஸ்வரூபம் 2 புரமோஷனுக்காக மும்பை ஐதராபாத் என கமல் ரவுண்ட் அடித்தார். இந்த நிலையில், விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் கமல் ஏன் கோபமாக பேசிவிட்டுப் போகிறார் என யூகிக்க முடியவில்லை. கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையில் அவ்வப்போது அரசியல் தொடர்பான விஷயங்களையும் பேசிவருகிறார். அதனால், இன்று பிக்பாஸ் பிரச்சனையைக் கையில் எடுப்பாரா அல்லது மற்ற விஷயங்களையும் உள்ளே இழுப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.