பாஸ்போர்ட் பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்

0
41

தற்சமயம் பல்வேறு புதிய செயலிகள் வந்தவண்ணம் உள்ளது, அதன்படி பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் தற்சமயம் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணபித்து இருந்தால், அதனுடைய ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை கொண்டு அனைத்து தகவலின் நிலையை அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிராக் செய்ய முடியும்:

டிராக் செய்ய முடியும்:

இப்போது பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வெளிவந்துள்ள இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் தபால் மூலம் அனுப்பப்பட்ட
பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த தகவல்களை இந்த செயலி மூலம் மிக எளிமையாக டிராக் செய்ய முடியும்.

ஆமதாபாத்

ஆமதாபாத்

குறிப்பாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கூட இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பயனர்களுக்கு மிக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என ஆமதாபாத் வட்டரா பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ராணி
தகவல் தெரிவித்துள்ளார்.

ஏஜென்டுகள் :

ஏஜென்டுகள் :

குறிப்பாக இந்த செயலி மக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும் பின்பு மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.

பாஸ்போர்ட் மையம்:

பாஸ்போர்ட் மையம்:

மேலும் இந்த செயலியில் பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டரா பாஸ்போர்ட் மையத்தையும் தேட முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியை பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.