பாஜக – அதிமுக உறவு தாய் – மகன் உறவு போன்றது: தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

0
0

தமிழகத்தில் பாஜக – அதிமுக உறவு தாய் – மகன் போன்றது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரி வித்தார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி என்பதை பாஜகதான் முடிவு செய்யும். தமிழ்நாட்டுக்கு பாஜக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

போலி பகுத்தறிவு உள்ளவர் மய்யம் என்று கட்சி ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததும் அமாவாசை நாளில். கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான்.

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிக்கு காரணமானோர் தண்டிக்கப்படுவார்கள்.

பாஜக – அதிமுக உறவு தாய் – மகன் போன்றது. மாநில வளர்ச் சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும்.

மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அவர்களது ஜனநாயக உரிமை என்றார்.