பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியங்கள் ரத்து: ஹரியாணா முதல்வர் கத்தார் கடும் எச்சரிக்கை

0
0

‘‘பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், ஓய்வூதியம் உட்பட அரசின் அனைத்து பயன்களும் ரத்து செய்யப்படும்’’ என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

‘நாட்டில் 12 வயதுக்கு உட்பட சிறுமிகளைப் பலாத்காரம் மற்றும் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’ என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பேசும்போது, ‘‘நமது பெண்கள் மீது யாராவது கை வைத்தால், அவர்களின் விரல்கள் வெட்டப்படும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்று எச்சரித்தார்.

இதற்கு கடும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதுகுறித்து கத்தார் கூறும்போது, ‘‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. யாருக்கு எதிராகவும் காட்டுமிராண்டித்தனமான  அதிகாரத்தை செலுத்த மாட்டோம்’’ என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் கத்தார் கூறியதாவது:

பலாத்காரம் மற்றும் மானபங்க வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களின் ஓட்டுநர் உரிமம், ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கான உரிமம், முதியோர் ஓய்வூதி

யம், ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் போன்ற அரசின் அனைத்து பயன்களும் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு ரேஷன் கார்டு மட்டும்தான் வழங்கப்படும். இந்தத் தடை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை நீடிக்கும்.

மேலும், பெண்கள் பாதுகாப்புக்கான விரிவான திட்டம் குறித்து அறிவிப்பு சுதந்திர தினம் அல்லது ரக் ஷா பந்தன் பண்டிகை நாளில் வெளியிடப்படும். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்,அரசு ஏற்பாடு செய்யும் வழக்கறிஞரை தவிர்த்து, தான் விரும்பும் வழக்கறிஞரை நியமிக்க விரும்பினால், அவருக்கு கட்டணம் வழங்க அரசு ரூ.22 ஆயிரம்வழங்கும்.மாநிலத்தில் பலத்கார வழக்குகளை விரைந்து முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக 50-க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் 6 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவ்வாறு  முதல்வர் கத்தார் கூறினார்.