பரபரப்பான சண்டையிலும் கில்மா வேலையை தொடரும் மகத்: பிக்பாஸ் புரமோ வீடியோ

0
0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பிரச்சனை, ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சண்டையின் காரணம் கேவலமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு அந்த சண்டையை பார்ப்பதில் ஈடுபாடில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பாத்திரம் சுத்தம் செய்தல் குறித்த சண்டை பிக்பாஸ் வீட்டில் பரபரப்பாக நடந்து வருகிறது. மும்தாஜ், இனிமேல் உங்களோட பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது என்று டேனியலை பார்த்து கூறுகிறார். அதற்கு டேனியல் பதிலுக்கு ஆத்திரமாக கூற ஒவ்வொருவரும் ஒன்றை கூறி பரபரப்பாக வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளார் மகத். மகத்தின் இந்த கில்மா வேலையை பார்த்து எரிச்சலடைந்த பாலாஜி, அவர்கள் இருவரையும் பார்த்து கோபமாக துப்புகிறார். இத்துடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவடைந்துள்ளது. பிக்பாஸ் வீட்டின் இன்றைய சண்டை எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்