பத்திரிக்கை மட்டுமே இத்தனை லட்சமா

0
60

இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவிற்கும், திருமணம் கோவாவில் வைத்து நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்விருவரின் திருமணமும் டிசம்பர் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகனுக்கு திருமணம் எனும்போது, அது சாதாரணமாக இருக்குமா என்ன? மிகவும் பிரம்மாண்டமான முறையிலேயே இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழ் தான், இப்போது இணையதளத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் ஒன்றின் மதிப்பு மட்டுமே சுமார் 1,50,000 ரூபாய் மதிப்புள்ளது, என தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. ஒரு பெட்டி வடிவில் இருக்கும் இந்த அழைப்பிதழின் உள்ளே, ஒரு விநாயகர் சிலையுடன் கூடிய பெட்டி இருக்கிறது. அதன் மேலே அழைப்பிதழ் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விநாயகர் சிலையை திறக்கும் போது கோவிலில் கேட்பது போல மணியோசைகேட்கிறது. மேலே இருக்கும் அழைப்பிதழில் விலை உயர்ந்த கற்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட அழைப்பிதழ் இருக்கிறது. இதை பார்த்த சிலர் அழைப்பிதழுக்கே இவ்வளவு ஆடம்பரமா? என ஒரு கேள்வி எழுப்பி இருக்கின்றனர் . வேறு சிலரோ, உலக பணக்காரர் என்றால் இவ்வளவு கூட செய்யவில்லை என்றால் எப்படி? என்றிருக்கின்றனர்.