நேரலையில் ஆண் நிருபரை முத்தமிட்ட 2 ரஷ்ய இளம் பெண்கள் – (வீடியோ) | Russian Models Kissed South Korean Reporter in Live!

0
0

நிருபர்!

ஜூலியட் கோன்சலஸ் தேரன் என்று அறியப்படும் அந்த பெண் நிருபர்.. அன்றைய தினம், செய்து தொகுப்பாக இரண்டு மணி நேரமாக பணியாற்றிக் கொண்டிருந்தோம். தேவையான வீடியோ பதிவுகளை எல்லாம் சேகரித்துவிட்டு, சரியாக நாங்கள் அப்போது தான் நேரலையில் இணைந்தோம். அது தான் சரியான தருணம் என்று கருதிய அந்த ஆண், அதை பயன்படுத்திக் கொண்டார். நேரலை முடிந்து நாங்கள் தேடிய போது அவர் அந்த இடத்தில் இல்லை என்றும் ஜூலியட் கோன்சலஸ் தேரன் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பெரும்பாலானோர் ஒரு பெண்ணுக்கு எதிராக நடந்த அநீதியாக தான் பதிவு செய்திருந்தனர்.

நேற்று!

அதே கால்பந்தாட்ட உலகக்கோப்பை குறித்த செய்தி நேரலை தான்… அதே போல நிருபரை இருவர் இம்முறை முத்தமிட்டு செல்கின்றனர். ஆனால், நிருபர் ஒரு ஆண், முத்தமிட்ட இருவரும் பெண்கள். இந்த செய்தியை ஊடகங்கள் எப்படி கையாண்டன… சமூக ஊடகங்களில் மக்கள் இதற்கு எப்படி ரியாக்ட் ஆனார்கள்.. கொடுத்து வெச்ச ஆளு, செம்ம இலக்கு, யோகம்… ஜாலி பண்ணிடாப்புல… ஆங்கிலத்திலோ, கொரியாவிலோ, ரஷ்ய மொழியிலோ.. எந்த மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் வெளியான செய்தி தலைப்புகள், மக்களின் ரியாக்ஷன் இப்படியான வார்த்தைகளில் தான் வெளிப்பட்டது.

தக்காளி, இரத்தம்!

அதெப்படி, ஒரு பெண் நிருபரை ஆண் முத்தமிட்டால் அத்துமீறல், கொடூரமான புத்தி, மனிதன்மையற்ற செயலாக காணப்படுகிறது, அதுவே ஆண் நிருபரை பெண்கள் முத்தமிட்டால்.., அவனுக்கு ஜாலி, யோகம், கொடுத்து வைத்தவர் என்றாகிவிடுகிறது. இது எப்படியான கண்ணோட்டமாக எடுத்துக் கொள்வது. இந்த சமூகம் பெண்கள் பெண்கள் பாலியல் குற்றங்களை செய்தால் கூட… அட அந்த ஆண் என்ஜாய் பண்ணியிருப்பாரு என்று தான் கூறுமா?

பெண்களுக்கு நடந்தால் இரத்தம், ஆண்களுக்கு நடந்தால் தக்காளி சட்னியா? என்னங்க சார் / மேடம் உங்க சட்டம்…??

பாலின வேற்றுமை ஏன்?

பாலின வேற்றுமை ஏன்?

தன்னை முத்தமிட்ட பிறகு அந்த பெண் நிருபரும் தொடர்ந்து தனது வேலையை தான் செய்தார்.. இடையூறை கண்டுகொள்ளவில்லை, ஆண் நிருபரும் அதே மாதிரியாக முத்தமிட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தனது பணியை தான் கவனித்துக் கொண்டிருந்தார். இருவரும் அவரவர் வேலையில் கவனமாக தான் இருந்தனர். ஆனால், எங்கிருந்த வந்தது இதில் பாலின வேறுபட்ட கருத்து?

தவறு, தவறுதான்!

தவறு, தவறுதான்!

ஆணுக்கு நடந்தாலும் சரி, பெண்ணுக்கு நடந்தாலும் சரி தவறு தவறு தான். ஒரே சூழல், ஒரே துறை, ஒரே மாதிரியான இடையூறு, ஆனால், மக்கள் மத்தியிலான கருத்து மற்றும் செய்திகளில் வெளியான தாக்கம் மட்டும் வெவ்வேறு மாதிரி. அந்த பெண்ணுக்கு நேர்ந்தது தவறு என்றால், இந்த ஆணுக்கு நேர்ந்ததும் தவறு தான். அல்ல இந்த ஆணுக்கு நடந்ததை கேளிக்கையாக தான் காண்போம் என்றால், அந்த பெண்ணுக்கு நேர்ந்ததும் கேளிக்கையானது தான்.

சமநிலை!

சமநிலை!

கற்பு ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட்டதோ என்னவோ இந்த சமூகம்.

இதெல்லாம் யாராச்சும் சீரியஸா எடுத்துக்கலாமா என்று யாரேனும் கருத்து கூறலாம், கூவலாம்… எடுத்துக் கொள்ள தான் வேண்டும். பாலின சமநிலை என்பது அனைத்திலும் இருக்க வேண்டும். பேருந்தில் தனித்தனி இருக்கை, சினிமாவில் தனித்தனி டிக்கெட் என்பதில் மட்டும் இருப்பதல்ல பாலின சமநிலை.