நேபாளில் கனமழை நிலச்சரிவுக்கு 8 பேர் பலி

0
0

நேபாளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

நேபாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெய்து வரும் மழையால், அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள பக்தாபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ஒரு வீடு, நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவை அடுத்து, அப்பகுதியில் இருந்த 3,000-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.-