நீ இரவு முழுக்க என்னிடம் சொன்ன ஆசையை நிறைவேற்றுவேன்: ஷாரிக்கிற்கு ஐஸ் வாக்குறுதி | Aishwarya loves to fulfill Shariq’s wish

0
0

யாஷிகா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக்கிற்கு இந்த வார கேப்டனை தேர்வு செய்யும் அதிகாரத்தை அளித்தார் கமல். ஷாரிக் கண்டிப்பாக ஐஸ்வர்யா பெயரை சொல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ மகத்தின் நெருங்கிய தோழியான யாஷிகாவின் பெயரை சொல்லிவிட்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஷாரிக்கை மிஸ் பண்ணுவேன் என்று கமலிடம் டேனி கூறினார். ஐஸ்வர்யா, ஷாரிக் என்று கூறியதுமே ஷாரிக்கால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை அவர் அருகில் நின்று கொண்டிருந்த கமல் ஹாஸனும், பார்வையாளர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்த அவரின் அம்மா உமா ரியாஸும் கவனிக்கத் தவறவில்லை.

முயற்சி

முயற்சி

இந்த நிகழ்ச்சியில் நான் வெற்றி பெறாவிட்டால் எனக்காக நீ வெற்றி பெற வேண்டும் என்று நீ இரவு முழுக்க கூறினாய். நான் வெற்றி பெற முயற்சி செய்கிறேன் என்று ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் கூறினார். நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன் என்று ஐஸ் சொல்ல அதை கேட்டு உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று ஷாரிக் சொல்ல பார்வையாளர்கள் ஓவென்று கரகோஷம் எழுப்பினர். ஷாரிக், ஐஸ்வர்யாவின் கொஞ்சல்ஸை பார்த்த உமா ரியாஸோ, டேய் நானும் இங்கனக்குள்ள தான்டா இருக்கேன் என்பது போன்று சிரித்தார்.

உமா

உமா

உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று கூறி மும்தாஜ் அழ அதை பார்த்து உமா ரியாஸுக்கு கண்ணீர் வந்துவிட்டது. வைஷ்ணவியை தவிர மற்ற யார் கிளம்பினாலும் மும்தாஜுக்கு கண்ணீர் வந்துவிடுகிறது. அய்யோ, உலக நாயகனையே அழுகை நாயகனாக்கிவிட்டார் பிக் பாஸ். பல சமயங்களில் அழுகையை அடக்கிக் கொண்டு பேசுகிறார் கமல். அழுகையை அடக்குவது குறித்து அவரே ஒரு முறை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.