நீங்க யாரு அனுமதி கொடுக்க… தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் கேள்வி! | Actor Jayavanth questions producer council

0
1

தியேட்டர் கிடைக்கவில்லை

ஆனால் காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, கடிகார மனிதர்கள், கடல் குதிரைகள், போயா, அரளி உள்ளிட்ட படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காட்டுப்பய கேள்வி

காட்டுப்பய கேள்வி

இந்நிலையில் காட்டுப்பய சார் இந்த காளி படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ஜெயவந்த், தயாரிப்பாளர் சங்கம் மீது புகார் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரே நாளில் பத்து படங்களின் வெளியீட்டுக்கு அனுமதி கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார நஷ்டம்

பொருளாதார நஷ்டம்

அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 3ம் தேதி ஒரே நாளில் 10 படங்களுக்கு வெளியீடு அனுமதி தந்து, சிறுபட தயாரிப்பாளர்களுக்கு பெரும் மனஉளைச்சளையும், பொருளாதார நஷ்டத்தையும், திரையரங்குகளுக்காக போராடுகிற நிலைமையையும் தயாரிப்பாளர் சங்கம் ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் கடிதம்

தயாரிப்பாளர் சங்கம் கடிதம்

இதற்கு விளக்கம் கேட்கும் போது எங்களுக்கும் சிறுபட வெளியீட்டுக்கம் எந்த தொடர்பும் இல்லை என வேடிக்கையான பதில் வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிபாளர் சங்கம் கடிதம் கொடுத்தால் மட்டுமே தணிக்கை வாரிய சான்றிதழ், திரையரங்கு வெளியீடு மற்றும் விளம்பர வெளியீடு போன்றவற்றை செய்ய முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளது. கடிதமும் கொடுக்கிறுது. ஆனால் இப்படிப்பட்ட சூழல் முன்பு இல்லை.

உரிமை இல்லையா?

உரிமை இல்லையா?

இவர்களுக்கு யார் அந்த அதிகாரம் தந்தது. அப்பொழுது தயாரிப்பாளர் கில்டுக்கும், சேம்பருக்கும் அந்த அதிகாரம் இல்லையா?. பாடுபட்டு தன் பணத்தை முதலீடு செய்கிற தயாரிப்பாளருக்கு தன் திரைப்படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்கும் உரிமை இல்லையா?

பாரபட்சமான அதிகார போக்கு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த பாரபட்ச அதிகார போக்கிற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இது குறித்து அனைத்து தயாரிப்பாளர் சங்கங்களும் கூடி முடிவெடுக்க வேண்டும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

புகார் செய்வோம்

புகார் செய்வோம்

இல்லை என்றால் பாதிக்கப்பட்ட சிறுதயாரிபாளர்களாகிய நாங்கள் புதுடெல்லியில் உள்ள காம்ப்படீசன் கமிஷன் ஆப் இந்தியாவில் புகார் அளிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.