நீங்க தான் தைரியமான ஆளாச்சே, அந்த போஸ்டரை கலாய்ங்க பார்ப்போம்: விஜய் ரசிகர்கள் சவால் | Vijay fans challenge Tamizh Padam 2 director

0
0

சென்னை: தமிழ் படம் 2 ரிலீஸ் குறித்த போஸ்டரை பார்த்த விஜய் ரசிகர்கள் அமுதன் நீங்க தான் தைரியமான ஆளாச்சே தில் இருந்தா அந்த போஸ்டரை கலாய்ங்க பார்க்கலாம் என்று சவால் விடுகிறார்கள்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 வரும் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

அந்த அறிவிப்பை வெளியிட அவர்கள் விஜய்யின் சர்கார் பட போஸ்டரை கலாய்த்துள்ளனர்.

கோபம்

சர்கார் பட போஸ்டரை கலாய்த்திருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

தைரியம்

தைரியம் இருந்தால் விஜய் தம்மடிப்பது போல் இருக்கும் போஸ்டரை கலாய்ங்க பார்ப்போம் என்று சவால் விடுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

போஸ்டர்

விஜய் ரசிகருக்கு தட் மண்டை மேலே இருக்கிற கொண்டையை மறைக்க மறந்த மொமன்ட்

முருகதாஸ்

சர்கார் பட போஸ்டரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் போஸ்டரை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் விஜய், முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.