நீங்க எந்த ராசி?… உங்களை எரிச்சலூட்டிக் கொண்டே இருக்கும் ராசிக்காரர்கள் யார்?… தெரிஞ்சிக்கோங்க.. | Which Zodiac Signs You Are Most Likely irritaing To according to your sunsign!

0
0

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு எப்போதுமே கன்னி, ரிஷபம் மற்றும் மகரம் ராசிகாரர்கள் ஒத்துப் போகவே மாட்டார்கள். இவர்கள்இணைந்திருந்தாலே அந்த இடம் பாம்பும் கீரியும் சண்டை போட்டுக் கொள்வது போலத் தான் இருக்கும்.

நீங்கள் மேஷம் ராசி என்றால், நீங்கள் பிறப்பிலேயே மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள், அதனால்தான் தன்னம்பிக்கை இல்லாத, சிறிய பிரச்சனைகளுக்கு தன்னம்பிக்கை இழப்பவர்களை நீங்கள் வெறுக்கிறீர்கள். நீங்கள் அவர்களுடன் பேசுவதையோ (அ) அவர்களை பார்பதையோ சங்கடமாக உணர்வீர்கள். இதன் விளைவாக நீங்கள் கொதிப்படைந்து, கடுமையான சொற்களை பேசி மற்றவர்களை புண்படுத்தக் கூடும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தனுசு, மிதுனம், கும்பம் ஆகிய மூன் ராசிக்காரர்களும் செட் ஆகவே மாட்டார்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால், ஒரே கலவரம் தான்.

ரிஷப ராசிக்காரர்கள், அவர்களுடைய அமைதிக்கு ஊறு கொடுப்பவர்களிடம் இருந்து மிகவும் விலகியே இருப்பார்கள். நீங்கள் எல்லை மீறி தவறான சொற்கள் (அ) செயல்கள் செய்பவர்களிடம் பொறுமை இழந்தும், கடுமையாகவும் மற்றும் கோபத்துடன் நடந்து கொள்வீர்கள். உணர்ச்சிகளை நன்கு கட்டுப்படுத்தி வைக்கத்தெரிந்த உங்களை, உங்களுக்கு நெருக்கமனவர்கள் கோபப்பட வைப்பது அரிது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதும் மீனம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் தான் கடும் எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள்.

உங்கள் அமைதியான வாழ்க்கைக்கு ஊறு விளைவிப்பவர்களை நீங்கள் வெறுப்பீர்கள். நீங்கள் பொதுவாக கேளிக்கை விரும்பி, எல்லா வித விழாக்களிலும் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் பங்கு கொள்வீர்கள். இவ்வகை விழாக்களை விரும்பாத மனநலம் கொண்டவர்களுடன் நீங்கள் இருப்பதை விரும்பமாட்டீர்கள். நீங்கள், ஒரு முடிவு எடுக்க மிக தன்னலத்துடன் யோசிப்பவர்களை வெறுப்பீர்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு துலாம், மிதுனம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் எப்போதும் செட் ஆகவே மாட்டார்கள்.

நீங்கள் ஆத்மார்த்தமான மற்றும் அமைதியாக முறையில் மன கொந்தளிப்பை கட்டுப்படுத்தும் குணம் உள்ளவர்கள், உங்கள் உள்ளத்தில் உள்ளதை யாரும் எளிதில் அறிந்துகொள்ள முடியாது. நீங்கள் மனிதர்களை விட அவர்களின் நடத்தை மற்றும் பழக்க வழக்கங்களுக்கு அதிகம் மரியாதை கொடுப்பீர்கள். நீங்கள் மனிதர்களின் உணர்வுகளை மதிக்காது காயப்படுத்துபவர்களை வாழ்க்கையில் மறுபடியும் நினைத்து கூட பர்க்க மாட்டீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த மூன்ற ராசிக்காரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. சிம்ம ராசி என்றாலே ரிஷபம், விருச்சிகம் மற்றும் மகர ராசிகள் எப்போதுமே பிரச்னையாகவே இருப்பார்கள்.

நீங்கள் சிம்ம ராசியாக இருந்தால், எல்லோருடைய கவனத்தையும் எல்லா நேரமும் வெற்றிகரமாக கவரும் வகையில் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் அடுத்தவர்களின் கட்டுப்பாடு மற்றும் விதண்டாவாதம் ஆகியவற்றை விரும்பாதவர்கள். நீங்கள் உங்களை சுற்றி நல்ல அறிவுள்ளவர்கள் இருப்பதை விரும்புவீர்கள். அதே சமயம் மற்றவர்களின் வாய்ப்புகளை தட்டி பறிப்பவர்களை விரும்பமாட்டீர்கள். உங்களுடைய நேர்மையான இந்த குணத்தின் காரணமாக உங்களை பற்றியோ (அ) உங்கள் கருத்து மற்றும் எண்ணம் குறித்து கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களையோ, நீங்கள் வெறுப்பீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் என்றாலே கொஞ்சம் அமைதியானவராக தான் இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதும் செட் ஆகாத ராசிகள் என்றாலே அது மிதுனம், மேஷம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளாக இருக்கும்.

நீங்கள் கன்னி ராசி என்றால், குறிப்பாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைதியான மற்றும் சீரான முறையில் வைக்க விரும்புவதோடு உங்கள் அன்புக்குரியவர்களின் விரும்பத்தக்கவராக இருக்க முனைவீர்கள். எனவே நீங்களே வாழ்கையில் சரியான முடிவு எடுக்க தெரியாதவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களிடம் இருந்து மிக விலகியே இருப்பீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் ஒத்தே போகாத ராசிகள் என்றால் அது கடகமும் ரிஷபமுமாகத் தான் இருக்கும்.

துலாம் ராசிக்காரர்கள் சம நிலையான மற்றும் ஒரு முழுமையான ராசிக்கரர்கள் என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். மேலும், அதற்கு தெளிவான காரணங்கள் உள்ளன நீங்கள் எப்பொழுதும் எதிலும் சமநிலையை மற்றும் முழுமையை விரும்புவீர்கள், அதனால் வெட்டி கதைகள் மற்றும் குறிக்கோள் இல்லாத பேச்சு பேசுபவர்கள், சுற்றி இருப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள். நீங்கள் ஒழுங்கற்ற அணுகுமுறை அல்லது வெளிப்படையாக உணர்ச்சிகளை வெளிபடுதுபவர்களை விரும்புவதில்லை.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்த காலத்திலும் செட்டே ஆகாத ராசிகள் என்றால் அவை சிம்மம், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் ஆவார்கள்.

நீங்கள் ஒரு தனிமை விரும்பி, அடுத்து உள்ளவர்கள், அவர்கள் தங்கள் செயல் (அ) வார்த்தை ஆகியவற்றால் உங்களைத் துன்புறுத்தலாம் என்று கருதுவதால், அடுத்தவர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள், உங்களை சுற்றி மற்றவர்கள் இருந்தால் அவர்களை தவிர்க்க விரும்புவீர்கள். அடுத்தவர்கள் அலுப்பான மற்றும் சுவாரஸ்யம் இல்லாத விஷயங்களை திணிக்க முற்படும் போது நீங்கள் அவர்களுடனும், அவர்களுடைய கருத்துக்களிலும் சலிப்படைவீர்கள். அடுத்தவர்கள் அதை உணர்ந்து கொள்ளவிலை என்றாலும் நீங்கள் பொறுமை காப்பீர்கள். ஆனால் அவர்களின் பேச்சு உங்கள் உணர்ச்சிகளை பாதிக்கும் தருணத்தில், நீங்கள் அவர்களை வெறுத்து ஒதுக்குவீர்கள், அவர்களை மீண்டும் உங்கள் வாழ்கையில் நம்ப மாட்டீர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஒத்துப் போகாத ராசிகளாக மூன்று ராசிகள் இருக்கின்றன.அவை கன்னி, ரிஷபம் மற்றும் மகரம் ஆகிய ராசிகளாகும்.

நீங்கள் மிகவும் துணிச்சலான தன்மை கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் துடிப்பு, மகிழ்ச்சி மற்றும் சாகச எண்ணங்களுக்கு மாற்று கருத்து கொண்டவர்களை விரும்ப மாட்டீர்கள். நீங்கள் பொதுவாக அடுத்தவர் கருத்துக்களை கேட்பவராய் இருப்பீர்கள், ஆனால் தங்களைப் பற்றியோ அல்லது அவர்களது சாதனைகள் பற்றியோ அதிகம் பேசுபவர்களை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு எப்போதுமே செட் ஆகாத ராசிகள் சில இருக்கின்றன. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?… அவை சிம்மம், மேஷம் மற்றும் தனுசு ஆகியவை தான்.

நீங்கள், அடிக்கடி நாளை பற்றி கவலைப்படாமல், இன்று எப்படி பொழுதை போக்குவது என்று நினைப்பவர்களுடன் சேர்ந்து இருப்பதால் கடுமையான சோதனைகளை சந்திப்பீர்கள். பொதுவாக வாழ்நாள் முழுதும் உங்களுடன் இருக்கும் தோழர்களைத் தேட முயற்சித்தாலும், வாழ்கையில் முதிர்ச்சி இல்லாத மற்றவர்களை முற்றிலும் ஒதுக்கி விடுவீர்கள். பொறுப்பற்ற மனிதர்களும் உங்களுக்கு ஒவ்வாதவர்களாக இருப்பார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு ஒத்தே வராத ராசிகள் யார் யார் என்றால்,அது கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் தான்.

நீங்கள் உண்மையில் சுதந்திரத்தை நேசிக்கிறவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். இதனாலேயே நீங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிடும் நபர்களை அல்லது வாழ்க்கையில் மிக பொறுப்பு வேண்டும் என்று பிரசங்கிப்பவர்களை வெறுக்கிறீர்கள். நீங்கள் அது போன்றவர்களை பார்ப்பதை கூட வெறுப்பீர்கள். உங்கள் சமாதானத்தை சீர்குலைக்கும் அல்லது பொறாமை மற்றும் சுய நலம் உள்ளவர்களிடம் இருந்து முற்றிலும் விலகி இருக்க ஒரு போதும் தயங்க மாட்டர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு எப்போதுமே செட் ஆகாத ராசிகள் மூன்று ராசிகள் உள்ளன. அவை துலாம், மிதுனம் மற்றும் தனுசு ஆகியவை தான்.

நீங்கள் உங்களுக்கு ஊறு விளைவிப்பவர்கள் என்று எண்ணுபவர்களிடம் மிக எளிதாக எரிச்சலடைவீர்கள். அதே போல நீங்கள், கட்டுப்பாட்டோடு மற்றும் யோசித்து பேசாதவர்களை விரும்பமாட்டீர்கள். நீங்கள் தலைகனம் உள்ளவர்கள் மற்றும் உண்மையான அன்பு இல்லாதவர்கள் ஆகியோரையும் வெறுக்கிறீர்கள், அவர்களிடம் நீங்களும் நல்ல மாதிரி நடந்து கொள்வதில்லை.