நியூயார்க் மியூசியத்தில் இடம்பெற போகும் இந்தியரின் 66 வருட உலக சாதனை நகம்! | Longest Nail Guinness World Record Holder Shridhar Cuts Nails After 66 years!

0
0

ஸ்ரீதர் சில்லல் புனேவில் வசித்தும் வரும் 81 வயதுமிக்க முதியவர். இவர் கடந்த 66 ஆண்டுகளாக தனது நகங்களை வெட்டாமல் நீளமாக வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார்.

இவரது எல்லா நகங்களின் நீளத்தையும் கணக்கிட்டால் அது 909.6 செண்டிமீட்டார் நீளம் வருகிறது. இது ஏறத்தாழ 358 அங்குலங்கள் ஆகும். அதாவது முப்பது அடிக்கு நிகர். ஸ்ரீதர் சில்லலின் கட்டை விரல் நகம் மட்டுமே 197.8 செண்டிமீட்டார் நீளம் கொண்டிருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1937ல் பிறந்த இவர், கடந்த 1952ம் ஆண்டில் இருந்து ஸ்ரீதர் சில்லல் தனது இடது கைவிரல் நகங்களை வெட்டியதே இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நியூயார்க் பயணம்!

உலகின் நீளமான கின்னஸ் உலக சாதனைக்கு சொந்தக்காரரான 81 வயது மிக்க ஸ்ரீதர் சில்லா நேற்று புனேவில் இருந்து நியூயார்க் பறந்தார். அங்கே இவரது இடது கைவிரல் நகங்களை நீக்கப்பட்டு, பிரபலமான ரிப்லேஸ் பிலீவ் இட் ஆர் நாட் (Ripley’s Believe It or Not)என்ற மியூசியத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மியூசியம் உலக புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அழிவில்லை!

அழிவில்லை!

கடந்த 2016ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஒற்றை கையில் நீண்ட நகங்கள் கொண்டவர் என இடம்பிடித்தார் ஸ்ரீதர் சில்லல். இப்போது நியூயார்க்கில் மியூசியத்தில் இடம்பெறவிருக்கும் ஸ்ரீதரின் நகங்கள் அழியாத நிலையில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

விரல் வைரல்!

நேற்று யூடியூப் வீடியோ இணையத்தில் வெளியான ஸ்ரிஷர் சில்லலின் நகம் நீக்கும் காணொளிப்பதிவு வைரலாக பலராலும் காணப்பட்டு வருகிரகுடு. கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பகிரப்பட்டிருக்கும் ஸ்ரீதர் சில்லல் நகம் நீக்கும் காட்சியை இப்போது வரைக்கும் 4.5 இலட்சம் பேர் கண்டு கழித்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். ஆயிரத்திற்கு நிகரான கருத்துகள் பதிவாகியுள்ளன.

சோகம்!

சோகம்!

66 ஆண்டுகளாக தன்னுடன் ஓட்டி இருந்த நகங்களை நீக்கும் போது ஸ்ரீதர் உணர்ச்சிவசப்பட துவங்கினார். ஒரு பக்கம் உடலளவில் வலி என்றால், அதை விட மனதளவில் அவரது வலி பெரிதாக இருந்தது அவர் கண்களில் வெளிப்பட்டது. நகங்கள் அறுத்து நீக்கப்பட்ட பிறகு நீளமான பேட்டி ஒன்றில் பத்திரமாக வைக்கப்பட்டது.

செயலிழப்பு!

செயலிழப்பு!

என்ன தான் உலக சாதனை படைத்தாலும் கூட, ஸ்ரீதரின் இந்த நீளமான நகங்களின் கூடுதல் எடையால், அவரது இடது கை இயல்பான வடிவத்தில் இருந்து மாறியது, மேலும், அவரால் சரிவர இடது கையை இயக்க முடியாத நிலையம் உண்டானது. மேலும், இந்த பிரச்சனையால், ஸ்ரீதரின் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட தாக்கத்தால், அவரது இடது காதும் கேட்கும் திறனை இழந்தது.

கௌரவ வேடம்!

கௌரவ வேடம்!

ஸ்ரீதர் சில்லலின் நகங்கள் இப்போது நியூயார்க் நகரின் புகழ்பெற்ற மியூசியமான ரிப்லேஸ் பிலீவ் இட் ஆர் நாட் இடம்பெற்றுவிட்டது. இதற்கு முன், ஸ்ரீதர் தனது நீளமான நகங்களுடன் ஜேக்கேஸ் 2 (Jackass Number Two) என்ற படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பவர் டூல் மூலம் அகற்றப்பட்ட ஸ்ரீதரின் நீளமான நகங்களை இனிமேல் நியூயார்க் சென்று மியூசியத்தில் தான் காண வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்