நாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் | 10 unknown aspects of Narada

0
0

பெற்றோர்

நாரத முனிவரின் பெற்றோர் முமூர்த்திகளில் ஒருவரும் படைத்தலின் கடவுளுமான பிரம்மா மற்றும் கல்வியின் கடவுளான சரஸ்வதி ஆவர். பிரம்மதேவரின் மகனான நாரதர் திருமாலின் பரம பக்தர் ஆவார். தன் பிறப்பின் நோக்கமே திருமலை வழிபடுவதுதான் என இருப்பவர் நாரதர். திருமாலின் ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் நோக்கம் வெற்றிபெற ஏதேனும் ஒரு வகையில் நாரதர் காரணமாய் இருந்திருப்பார்.

முன்ஜென்மம்

முன்ஜென்மம்

முன்ஜென்மத்தில் நாரதர் முனிவர்கள் வாழும் ஆசிரமத்தில் பணிபுரிந்த ஒருவரின் மகனாக பிறந்தார். சிறுவனாக இருந்தபோதே அங்கே அவர்கள் திருமலை பற்றி பாடிய பாடல்களால் ஈர்க்கப்பட்டு திருமாலின் மேல் அதிக ஈடுபாடு கொண்டார். அங்கிருந்த முனிவர்களின் போதனைகள் அவரை சிறுவயதிலேயே இவ்வுலக ஆசைகளில் இருந்து விலகி இருக்கும்படி செய்தது. தன் தாய் இறந்த பிறகு துறவறத்தில் ஈடுபட்ட அச்சிறுவன் தன் கடுமையான தவம் மூலம் அடுத்த பிறவியில் நாரதராய் பிறந்து திருமாலின் புகழை மூவுலகமும் அறியும்படி பாடுவார் என்ற வரம் பெற்றார்.

நாரத ஜெயந்தி

நாரத ஜெயந்தி

வருடம்தோறும் மே 12 ஆம் தேதி நாரத ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர்தான் உலகின் முதல் பத்திரிகையாளர் ஆவார். ஏனெனில் இவரின் பணியே மூவுலகையும் சுற்றிவந்து ஒருவர் பற்றிய செய்திகளை மற்றவரிடம் கூறுவதுதான். அனைத்து அசுரர்களும், தேவர்ளும் மதிக்கும் ஒரு மாமுனி நாரதர் ஆவார். அனைத்து தேவர்களையும் சிறைபிடித்த ராவணன் கூட நாரதரை விட்டு வைத்ததன் காரணம் அவர் மீதிருந்த மரியாதைதான்.

கலைகள்

கலைகள்

நாரதர் சந்தன முனிவரிடம் இருந்து பூமி வித்தையை கற்றுத்தேர்ந்தார். வித்தைகளிலேயே மிக உயரிய வித்தையாக இது கருதப்படுகிறது. இது மட்டுமின்றி ஆயக்கலைகள் அறுபத்திநான்கையும் கற்றுத்தேர்ந்தவர் நாரத முனிவர். குறிப்பாக இவர் இசைக்கலையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவரின் கையில் எப்பொழுதும் மகதி என்றழைக்கப்படும் வீணை இருக்கும். இந்த வீணை இல்லாமல் இவரை யாரும் பார்த்திருக்க முடியாது. மகதியை கொண்டு இவர் வாசித்து பாடும் போது அதற்கு மயங்காதவர்கள் மூவுலகிலும் இருக்க முடியாது.

திருமாலுக்கு சாபம்

திருமாலுக்கு சாபம்

திருமாலின் தீவிர பக்தரான நாரதர் ஒருமுறை திருமாலுக்கே அவர் மனைவியை பிரிந்து பூமியில் மனிதராய் பிறக்கவேண்டும் என சாபம் அளித்தார். அப்படி பிறந்த திருமாலின் அவதாரம்தான் ராமபிரான் ஆகும். இவரின் தூண்டுதலின் பேரிலியே வால்மீகி இராமாயணத்தை எழுதியதாக புராணங்கள் கூறுகிறது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

நாரதருக்கு மரணம் என்பதே இல்லை என புராணங்கள் கூறுகின்றது. வெகுசிலரே இந்த அமரத்துவத்தை அடைந்திருக்கிறார்கள். மொத்தமாக 12 நபர்கள் மட்டுமே இந்த சிரஞ்சீவி வரத்தை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமரத்துவதிர்காகத்தன் பல அரக்கர்கள் உயிரை விட்டனர். ஆனால் பூரண தெய்வபக்தி இருந்தால் போதும் அனைத்தும் நம்மை தேடி வரும் என்பதற்கு நாரதர் ஒரு சான்றாவார்

சாபம்

சாபம்

நாரதர் மூவுலகத்தையும் சுற்றிக்கொண்டேதான் இருப்பாரே தவிர அவரால் எங்கும் தங்க இயலாது. காரணம் பிரஜாபதி தக்ஷகன் நாரதருக்கு அளித்த சாபம்தான். தன்னுடைய அனைத்து மகன்களும் சந்நியாசியாக செல்ல காரணம் நாரதர்தான் என்பதை அறிந்த பிரஜாபதி தன் மகன்களை இழக்க காரணமாக இருந்த நாரதருக்கு மூவுலகையும் சுற்றி வர இயலுமே தவிர எங்கும் தங்க இயலாது என்று சாபம் கொடுத்தார். அந்த சாபத்தையும் நாரதர் வரமாகவே எண்ணினார்.

புத்தகங்கள்

புத்தகங்கள்

இவர் இல்லாத புராணங்கள் இல்லையென்றாலும் இவருடைய தனித்துவத்தை பற்றி உலகிற்கு எடுத்துகூற சில புத்தகங்கள் இருக்கிறது. தேவரிஷி நாரத முனிவரைப் பற்றியும் அவரது மகிமைகளை பற்றியும் அறிய இரண்டு புத்தங்கள் உள்ளது. ஒன்று நாரத புராணம் மற்றொன்று நாரத சுக்தி ஆகும்.

கோவில்

கோவில்

மூவுலகையும் சுற்றி வந்தாலும் எந்த இடத்திலும் தங்க இயலாத நாரதருக்கு தங்குவதற்கு ஒரு கோவில் உள்ளது கர்நாடக மாநிலத்தில். கர்நாடக மாநிலம் கிருஷ்ணா நதிக்கரையில் கோர்வா என்றழைக்கப்டும் தீவில் நாரதருக்கென பிரத்யேக கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் நாரதகடே என்று அழைக்கப்படுகிறது. வருடம்தோறும் நாரத ஜெயந்தி அன்று இந்த கோவிலில் கோலாகல விழா நடக்கின்றது.