நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்ற முடிவு: முஸ்லிம் மகளிர் போராட்டக் குழு வரவேற்பு

0
0

மாநிலங்களவையில் நேற்று முன் வைக்கப்பட இருந்த முத்தலாக் மசோதா, குளிர்காலக் கூட்டத் தொடருக்கு தள்ளிப் போயிருக் கிறது. இதில், மத்திய அமைச் சரவை செய்த மாற்றத்தை பாரதிய முஸ்லிம் மகளிர் போராட்டக் குழு வரவேற்றுள்ளது.

முத்தலாக் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடைவிதித்தது. இதையடுத்து ‘முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு (திருமண உரிமைகளின் பாது காப்பு) சட்டம் 2017’ எனும் பெயரில் மத்திய அரசு கொண்டு வந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அதில் சில திருத்தங்களை மேற் கொள்ளுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததால், மாநிலங் களவையில் அந்த மசோதா நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவை யில் அம்மசோதாவை நிறை வேற்றுவதற்காக, நேற்று முன்தினம் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இதை யடுத்து, மழைக்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று இம்மசோதாவை மாநிலங் களவையில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டு அடுத்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கு அம் மசோதாவின் மீது எதிர்க்கட்சிகள் தம் கருத்துக்களை வெளிப்படை யாகக் கூறாததே காரணம் எனக் கருதப்படுகிறது. இதனால், மீண்டும் நிலுவையில் சிக்காமல் இருக்க, எதிர்க்கட்சிகளிடம் மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, முத்தலாக் மீதான உச்ச நீதிமன்ற வழக்கின் முக்கிய மனுதாரரான பாரதிய முஸ்லிம் போராட்டக் குழுவினர், மத்திய அரசு செய்த இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர். மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவில் மாற்றம் செய்ய வேண்டும் என இவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அக்குழுவின் இணை அமைப்பாளர் ஜக்கியா சோமன் கூறியதாவது:

முஸ்லிம் பெண்களின் பாது காப்பு விஷயத்தில் மத்திய அரசு காட்டும் அக்கறை பாராட்டுதலுக்கு உரியது. முத்தலாக் கூறி உடன் விவாகரத்து செய்வதன் மீது முஸ்லிம் பெண்கள் உடனடியாக சட்டம் நிறைவேற்ற விரும்புகின்ற னர். முத்தலாக்கை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் அறிவித்த பின்பும், பல பெண்கள் பாதிக் கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு செய்துள்ள மாற்றத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பினை கைவிட்டு விரைவில் சட்டம் அமலாக உதவ வேண்டும் என அவர் தெரிவித்தார்.