நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்திலும் யோகிபாபு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது! | Yogi babu joins with Nayanthara again!

0
0

சென்னை: லக்‌ஷ்மி குறும்பட இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தில் யோகிபாபு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் இப்போது ஹாட் டாபிக். கோலமாவு கோகிலா, அஜித்தின் விஸ்வாசம், அதர்வாவின் இமைக்கா நொடிகள், சக்ரி டோலட்டியின் கொலையுதிர்காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா, சிரஞ்சீவியோடு சைரா நரசிம்ஹ ரெட்டி, மகேஷ் வெட்டியாரின் கோட்டயம் குர்பானா என கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என்று எல்லா வுட்டிலும் மல்லுக்கட்டி நிற்கிறார்

இப்போது லக்‌ஷ்மி, மா குறும்படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சர்ஜுன்.கே.எம் இயக்கும் ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 8 தோட்டாக்கள் படத்தின் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு இன்னும் பெயர் முடிவு செய்யப்படாத நிலையில், கலையரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இப்போது யோகிபாபுவும் இணைந்திருக்கிறார். சென்னையில் ஒரு பேய் பங்களா செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு பொள்ளாச்சி செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

கோலமாவு கோகிலாவிற்கு பிறகு நயன்தாராவும் யோகிபாபுவும் அடுத்த படத்திலேயே இணைந்துள்ளார்.