நயன்தாராவுக்கு நண்பர்கள் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

0
0

நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, அவருக்கு நண்பர்கள் தின வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் நேற்று (ஆகஸ்ட் 5) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அனைவரும் தங்களுடைய நண்பர்களுக்கு வாழ்த்துகள் கூறியும், இனிப்புகள் கொடுத்தும் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கூட முகம் தெரியாத நட்புகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தன் காதலி நயன்தாராவுக்கு இன்ஸ்டாகிராமில் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவின் கையோடு கைகோத்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “இந்தக் காதலில் அபரிமிதமான நட்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த நட்பில் அளவில்லா காதலும் இருக்கிறது” என்று குறிப்பிட்டு நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.