நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
0

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நாயகி முக்கியத்துவம் உள்ள படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். விக்னேஷ் சிவன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ்  தயாரித்துள்ளது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முதன்முதலாக வெளியிடப்பட்ட ‘கல்யாண வயசு’ பாடலில் இணையத்தில் வைரலானது. இந்த பாடலை யூடியூபில் கிட்டத்தட்ட 3 கோடி பேர்  பார்த்துள்ளதுனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. 

 

இதையடுத்து படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.