நம்ம பாட்டி காலத்து அரிசிதான் உலகின் ஆரோக்கியமான அரிசினு இன்று ஆராய்ச்சிகள் சொல்கிறதாம்…!! | 8 Best Health Benefits of Red Rice

0
0

பாட்டி காலத்து அரிசி :-

முன்னொரு காலத்தில் கிட்டத்தட்ட 40,000 அரிசி வகைகள் இருந்தது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆனால் இன்றோ அதில் பல வகை எங்கே சென்றது என்பதுகூட தெரியவில்லை. அந்த காலத்தில் மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர். மாறாக இன்று மிக குறுகிய காலத்திலேயே இறந்து விடுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். குறிப்பாக, அதிகம் நாம் சாப்பிடும் அரிசியின் வகையில்தான் பிரச்சினை உள்ளது. ஏனெனில் இன்று நாம் உண்ணும் “வெள்ளை அரிசி” உமி, தவிடுகளை முற்றிலுமாக நீக்கி செயற்கை முறையில் தயாரிக்க படுகிறது. ஆனால் அன்றோ, நம் முன்னோர்கள் “கைக்குத்தல் சிவப்பு அரிசியையே” உண்டு மகிழ்ந்தனர்.

ஊட்டச்சத்துக்கள் :-

ஊட்டச்சத்துக்கள் :-

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அவற்றை இனி பார்ப்போம்…

– வைட்டமின் பி1, பி2, பி6

– இரும்பு சத்து

– கால்சியம்

– ஜின்க்

– மெக்னீசியம்

இவை அனைத்தும் உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் மிக முக்கிய பங்காற்றுக்கிறது.

அதிக நார்ச்சத்து :-

அதிக நார்ச்சத்து :-

பாட்டி காலத்தில் அவர்கள் உண்ட சிவப்பு அரிசியில் பல சத்துக்கள் இருந்தன. மேலும் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து அதிக நாட்கள் நோயின்றி வாழ உதவியது. இதில் எளிமையாக கரையக்கூடிய நார்சத்துக்களே அதிகம் உள்ளது. விரைவாக செரிமானம் அடைந்து, ஜீரண கோளாறுகளை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல உணவு. இன்றும் இந்த அரிசியை இயற்கை பொருட்களை விற்கும் ஒருசில கடைகளில் பெறலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் :-

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் :-

மற்ற அரிசிகளை காட்டிலும் இதில் 10 மடங்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறது. எனவே, இது வெள்ளை ரத்த அணுக்களை வலிமையுடன் வைத்து எதிர்ப்பு சக்தி மண்டலத்தை நோய் கிருமிகளிடம் சண்டையிட செய்கிறது. சிவப்பு அரிசி உண்பதால் இதயம் சார்ந்த எந்த நோய்களும் வராதாம். ஏனெனில் இதில் கொழுப்புகள் மற்றும் கொலெஸ்ட்ரோல்கள் சிறிதுகூட இல்லை.

சிவப்பு ரத்த அணுக்கள் :-

சிவப்பு ரத்த அணுக்கள் :-

அதிக இரும்பு சத்தும், வைட்டமின் பி-யும் இந்த சிவப்பு அரிசியில் உள்ளதால் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சருமத்தை என்றும் இளமையாகவும், மென்மையாகவும் இருக்க செய்யும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு :-

நீரிழிவு நோயாளிகளுக்கு :-

சிவப்பு அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு நன்கு பயன்படும். இது சர்க்கரையின் அளவை சீரக வைக்கிறது. அத்துடன் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்களின் உடலில் அதன் அளவை குறைக்க செய்கிறது. இதில் கிளைசெமிக் அளவு 55-தான் உள்ளது. எனவே சிவப்பு அரிசி நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பின் விளைவையும் ஏற்படுத்தாது.

கொழுப்புகள் அற்ற அரிசி :-

கொழுப்புகள் அற்ற அரிசி :-

முற்றிலும் கொழுப்புகள் அற்ற அரிசி இதுவே. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசியை பயன்படுத்தலாம். அதிக சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் சிவப்பு அரிசியை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும். மேலும் உங்கள் எடை மிக கச்சிதமாக இருக்கவும் இது உதவும். அத்துடன் உடலுக்கு எப்போதும் அதிக ஆற்றலை தரும்.

இரத்த சோகைக்கு தீர்வு :-

இரத்த சோகைக்கு தீர்வு :-

இப்போதெல்லாம் அதிக பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நோய்களில் முதன்மையானது இரத்த சோகையை. இதனை குணப்படுத்த சிவப்பு அரிசி போதுமே. 100 gm சிவப்பு அரிசியில் 21 % இரும்பு சத்து இருக்கிறது. உங்கள் உணவை சிவப்பு அரிசியில் தயாரித்து உண்டால் இரத்த சோகையை எளிதில் சரிபடுத்தலாம்.

எலும்புகள் வலு பெற :-

எலும்புகள் வலு பெற :-

எலும்புகள் உறுதி பெற மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் மக்னிசியமே. சிவப்பு அரிசியில் அதிக அளவில் இவை இருப்பதால் எலும்புகள் வலுவாக இருக்க உதவும். எலும்புகளின் கூட்டை அதிகம் உறுதிபடுத்துகிறது. அத்துடன் எலும்புகள் தேய்மானம் அடைவதையும், எலும்பு முறிவு ஏற்படுவதையும் தடுக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.